தந்துவிடு இரவு நேர முத்தங்களை
தொலைப்பேசியில்தான் என்றாலும்
உன் முத்தங்கள் வாங்காது
நகர்வதில்லை என் இரவுகள்…
சில சமயங்களில்
பக்கத்தில் ஆட்கள் இருப்பதற்காகவும்
பொது இடமென கருதியும்…
நீ முத்தங்கள் தராமல் விட்டு விட்ட
இரவுகளின் சிறகுகள்
சருகுகளாய் உதிர்ந்து போய்விடுகின்றன…
இனியாவது என் இரவுகளும் தூக்கங்களும்
கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க…
மறவாமல் மறுக்காமல் தந்துவிடு
எனக்கு மட்டுமேயான
உன் இரவு நேர முத்தங்களை…