பிறவிப்பயன்
மாசி மாதம்
கருவில் தோன்றி
மாசில்லா இன்பம்
பெருமளவில் தந்தாய்
கார்த்திகை மாதம்
மண்ணில் தோன்றி
காலை பொழுதில்
கண்ணில் தெரிந்தாய்
பிரசவவலி மறந்து
பரவசம் அடைந்தேன்
பிறவி எடுத்த
பயணை அடைந்தேன்