காதல்

கற்பனையில் வடிப்பது கவிதை
கற்பனையை உன் அழகு விஞ்சியதால்
உன் அழகிற்கு கவிதை எழுத முடியவில்லை
சித்திரம் தீட்டலாம் என்று நினைத்து
வண்ணம் குழைத்து தூரிகையில் ஏற்றி
உன் வடிவழகை வரைந்திடலாம் என்று
முயன்றேன், சித்திரமாய் உன்னழகை
தீட்ட முடியவில்லை -என்னவளே
சிற்பியாய் கருங்கல்லில் உளிகொண்டு
உன் அழகை ஓர் சிலைக்குள் செதிக்கிட
முயன்றேன் அதிலும் தோல்விகண்டேன்
ஏன் ஏன் என்று எனக்குள் நான் கேட்டபோது
பதில் கிடைத்தது அதுதான் என் எண்ணமெல்லாம்,
உன்னைப்பற்றிய என் எண்ணமெல்லாம்
உன் உருவாய் மாறி என்முன் நின்றாட
என் சித்தமெல்லாம் நீயாகிவிட்டாய்
நீ இல்லாமல் போனபின்னும் நீயே என் சித்தம்
உனக்கு கவிதை ஏன்,சித்திரமேன், சிலையுமேன்
இவற்றையெல்லாம் விஞ்சியதல்லவோ உன் அழகு !
சித்தமே நீயானபின் இனி நீ வேறல்ல நான் வேறல்ல
என்னுள் எப்போதும் நீதான் என்னவளே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Oct-17, 11:49 am)
Tanglish : kaadhal
பார்வை : 269

மேலே