தலைகவசம்

தலைகவசம் அணியாதோர்
தாங்கலாய் தேடிக்கொள்ளும்
தலைவிதியே மரணம்
-----------
சாலைவிதியை மதிக்காமல்
செல்லுகின்ற அன்பர்களே
ஓலையின்றி தேடிவரும்
உத்தரவு மரணமே
--------
விதிமறந்து வேகமாய்
வீதியில் சென்றால்
மதிமயங்கும் இறுதியில்
மரணமே கொடுக்கும்
---------
துர்மரணத்தை தேடியே
தூங்கிக் கொண்டே
தூரமாய் வேகமாய்
வாகனம் செல்லும்
-----------
வீட்டிற்கு செல்லவே
வாகனம் வேண்டும்
விதிமாறி சுடுகாட்டிற்கு
ஓட்டிச் செல்லாதே
-----------
குடும்பத்தை நினைத்து
வாகனம் செலுத்து
கூடிய மட்டும்
வேகத்தைக் குறைத்து
---------
போதையில் வாகனம்
போய்சேரும் இடமோ
மருத்துவ மனை வளாகம்

-----------
விதியை வெல்ல
வேகமாய் ஓட்டும்
புரியாத நிமிடத்தில்
பேராபத்து காத்திருக்கும்
------------

இருசக்கர வாகனத்தை
முறுக்கினால் இன்பமாம்
இடையில் சறுக்கினால்
இறுதியில் துன்பமாம்
------------
விதியை மாற்றும்
வேதனையை சேர்க்கும்
மதிமயங்கி வேகமாய்
மரணத்தை தழுவும்
==========

எழுதியவர் : (26-Oct-17, 2:49 pm)
Tanglish : thalaikavasam
பார்வை : 390

மேலே