பிரபஞ்சம் - தத்துவம்

ஊழி முன்னேந்தி ஓயாமல்
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்
உண்மையில் ஊழியின் நாடித் துடிப்பா
மனிதன் நாடித் துடிப்பு நின்றுவிட்டால்
உயிரற்ற ஜடம்தான் மிஞ்சும் -இந்த
கடல் அலைகள் ஆர்ப்பரிக்க மறந்துவிட்டால்
பிரபஞ்சம் அடங்கிவிடுமா அழிவால்
அப்போது ஊழி முதல்வன் உருவாக்குவானா
புதியதோர் பிரபஞ்சம் -இப்படித்தான்
அழிவில் ஆக்கமும், ஆக்கம் அழிவதும்
சிருஷ்டியில் 'அவன்' வைக்கும் ரகசியம்?
பிறந்தவை அத்தனையும் அழியும்
அது எதுவாய் இருந்தாலும் ; ஜடப்பொருளோ
இல்லை உயிரோடு உலாவும் ஜீவ சிருட்டியோ
அழிவில் முடியும் ஆக்கத்தின் தொடக்கம்
ஆக்கம் முடிவில் அழியும் இது ஓர் மாயம்
இதை அறிந்துகொண்டால் 'உண்மை' தெளிவாகும்
உண்மைத் தெளிந்தபின் பற்றுகள் அத்தனையும்
அற்றுப்போக 'வீடு' தெரியுமே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Oct-17, 12:00 pm)
பார்வை : 494

மேலே