புலம்பெயர்ந்திடாதே மனமே

புலம்பெயர்ந்தது மனம்
புள்ளியாய் நினைவுகள்

இடையிலே வீற்றிருக்கும் மனம்
சுழியிலேயே நின்றாடி
நினைக்கவும் மறக்கவும் விடாமல்
இடபுற நெஞ்சை
இறுக்கிப் பிழிகின்றது

நினைவுகள் மங்கி மறைந்திடாமல் _ மனம்
மனம் பாசமிறைத்து ஊற்ற _ அதில்
அதில் எதார்த்தம் இல்லை என்கிறது நினைவு

உண்மையில்
நான் தோற்க நினைக்காமல்
தோற்றுப்போன நினைவுகளில் ஒன்றுதான் நீ

புள்ளியாய் நினைவுகள்
எனினும்
புலம்பெயர்ந்திட வேண்டாம் மனமே…

எழுதியவர் : மகேந்திரன் (28-Oct-17, 9:43 pm)
பார்வை : 226

மேலே