காதலின் பரிசு

தண்ணீரின்றி தரையில் தவிக்கும் மீனை தண்ணீர் குவளையினுள் வைத்து வாழ்வதற்கான ஆசையை தந்து அடுத்த கனமே குவளையை உடைத்து துடி துடிக்க உயிரை எடுத்தாற்ப்போல....
காதலியையும் அவளைக் கண்ட கனமே காதலிக்கும் ஆசையையும் கொடுத்த ஆண்டவனுக்கு காதலியின் கரம்பிடித்து கலந்து வாழும் தகுதியை எவனுக்காே குடுத்து.....
என்னையும் என் உயிரையும் கொல்லாமல் அவள் நினைவால் தினமும் துடி துடிக்க கொல்வதேனாே....
உன் நினைவுகளினால் வந்த கண்ணீரை கானல் நீராக்கி நீந்தி நீந்தி வாழ்ந்துக் காெள்கிறேன்
கண்ணீர் வற்றி உயிர் பிரியும்வரை...#ABK

எழுதியவர் : பாலகிருஷ்ணன் (26-Oct-17, 10:17 pm)
சேர்த்தது : Balakrishnan
Tanglish : kathalin parisu
பார்வை : 396

மேலே