100 குரல்களில் தமிழன்பனின் 1000 கவிதைகள் அமெரிக்காவில் ஓர் கவிதைத் திருவிழா
டல்லாஸ்(யு.எஸ்): கவிஞர் ஈரோடு தமிழன்பனின் கவிதைத் தொகுப்பில் உள்ள 1000 கவிதைகளை வாசிக்கும் ஒரு கவிதைத் திருவிழா முதன்முறையாக அமெரிக்காவில் அரங்கேறி உள்ளது.
டல்லாஸ் நகரில், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த விழாவில் குழந்தைகள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்து உள்ளார்கள்.
கவிதை வாசிப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் மற்றும் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நூல் ஒன்றும் வழங்கப்பட்டு உள்ளது. கவிஞன் வாழும் காலத்திலேயே இப்படியொரு விழா அமெரிக்க மண்ணில் நடந்தது தமிழுக்கும், தமிழர்களுக்கும் மிகப்பெரிய பேறாகும்.
இந்த கவிதைத் திருவிழாவில் வட அமெரிக்கா முழுவதிலிருந்தும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்றனர்
கவிதைத் திருவிழா 2017 அக்டோபர் 28ம் தேதி சனிக்கிழமை, மாலை 3:30 மணி முதல் 5:30 வரை ப்ளேனோ வில் அமைந்துள்ள Haggard Library அரங்கத்தில் நடை பெற்றது . மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்தனர் .
-இர தினகர்
English Summary-
An exclusive event was organized in Dallas, for reciting 1000 poems of Kavingar Erode. Tamilanban in Dallas, Texas. Children and adults from across North America . This first of kind event was organized by Metroplex Tamil Sangam