தீய்ந்தய்யா உடம்பு

எங்கெங்கோ போகுதய்யா நாடு –அதில்
என்றென்றும் தோன்றுதய்யா பீடு !
பங்கமுற்று வீழுதய்யா நீதி –பெரும்
பாவமதை விதைக்குதய்யா சாதி !

நாட்டுநலம் பேணுவது யாரு ?-அவர்
நல்லவரா கெட்டவரா கூறு...
வீட்டைமட்டும் என்றென்றும் நினைப்பார்-பிறர்
வாழ்வுதன்னை வேதனையில் நனைப்பார்....

சட்டைதானே என்றென்றும் வெள்ளை-அவர்
போட்டிடுவார் நாட்டையென்றும் கொள்ளை
திட்டமின்றி நடக்குதய்யா ஆட்சி –அதில்
தடுமாறி தவிக்குதய்யா மாட்சி !

கலப்படமாய் ஆனதய்யா கல்வி –அந்தக்
கறைதுடைக்க வேண்டுமய்யா வேள்வி !
புலப்படவே இல்லைய்யா வாழ்வு –அதில்
பிறந்திங்கே வருகுதய்யா தாழ்வு !

மாணவர்கள் கண்டிடுவார் கனவு –அதில்
மருத்துவமும் படித்திடவே நினைப்பு
காணாமல் போனய்யா படிப்பு –அந்தக்
கவலையிலே தீய்ந்தய்யா உடம்பு...

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (2-Nov-17, 10:05 pm)
பார்வை : 55

மேலே