கட்டமைப்பா மூடமையா

நில்லாமல் சுழலும்
நிலநீர் புவியே..!
சொல்லாயோ அயராதஉன்
செயலின் ரகசியத்தை?
ஒளிர்ந்தாலும் இருண்டாலும்
உலகைசுற்றும் நிலவே
சொல்லாயோ அயராதஉன்
செயலின் ரகசியத்தை?
கரைந்தாலும் வறண்டாலும்
காற்றாடும் முகில்கூட்டமே
சொல்லாயோ அயராதஉன்
செயலின் ரகசியத்தை?
வென்றாலும் வலித்தாலும்
பெண்பார்க்கும் என்தோழமையே
சொல்லாயோ அயராதஉன்
செயலின் ரகசியத்தை?
ஊதியஉயர்வு
பெற்றாலும் கேட்டாலும்
நல்லாவே உழைக்கும் நல்லவனே
சொல்லாயோ அயராதஉன்
செயலின் ரகசியத்தை?...!
இயந்திரம் போன்ற கட்டமைப்பா?
ஏனென்று அறியா மூடமையா?

எழுதியவர் : காசி.தங்கராசு (3-Nov-17, 3:57 am)
பார்வை : 40

மேலே