என் புனித நதியே

கடுந்தாகம் கொண்டவன் கண்கள்
கூவம் கண்டால் சிரித்திடுமோ - வெள்ளி
நீரருவி கண்டு சிரித்திடுமோ

தீர வேண்டியது தாகம்தான்
என்றாலும்,
எந்த ஒரு சாக்கடையையும்
தன்னை தீண்ட அனமதிக்காத
அப்புனித பேராற்றை
கண்ட பின்பும்.,
எப்படி அனுமதிப்பேன்
தானாய் கூவம் தேடும் சாக்கடைகளை.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (3-Nov-17, 4:24 pm)
பார்வை : 157

மேலே