வாழ்வியல் நிதர்சனம்
ஆற கிடைப்பது அமைதி
அடங்க கிடைப்பது மரணம்
தேட கிடைப்பது உழைப்பு
தெருவில் கிடப்பது யோகம்
மோகம் தருவது முற்று
காதல் தருவது அதன் தொடர்ச்சி
ஓட கிடைப்பது வாழ்க்கை
ஓய்வாய் கிடைப்பது உறக்கம்
நிலையாய் இருப்பது நேர்மை
நிறையாமலே இருப்பது அதன் எதிர்மறை
உண்மை தருவது நம்பிக்கை அதன்
உறுதியில் கிடைப்பது சிறு சோதனை
அதை
வென்றால் கிடைப்பது புதுவாய்ப்பு - அதை
வேரூன்ற விட்டால் கிடைப்பது சிறுவேதனை