கொஞ்சும் உன் விழிகள்

செல்லும் வழி மறித்து
கொஞ்சம் வலி கொடுத்து
கொஞ்சும் உன் விழிகள்...!!
இன்னும் வலி கேட்டு
இதயத்தில் இடம் கேட்டு
கெஞ்சும் என் விழிகள்...!!!
கண்களில் தவிப்பு
வார்த்தைகளில் மறுப்பு
காதலின் சிறப்பு????
காதல் சொல்லிட
ஏனடி வெட்கம்
ம் என்று சொல்லிட
வாழ்வே சொர்கம்..!!!