பெண்ணே உன்னால் யாவும் ஆனதே

என் கண்களுக்கு உன்னால் வேதனை
என் நெஞ்சுக்கு பெரும் சோதனை
தென்றலாய் வந்த தென்றல் எனக்கு
சுட்டெரிக்கும் அக்கினியைக் கக்கியதே
இருப்பாளென நினைத்தேன் என்றும் அன்பு மிக்க பெண்ணாய்
பாசம் கொள்வாளென நினைத்தேன் பரிவோடு என்பால்
மாறாக எரித்தாளே என்னை இன்று அவள் தீப்பொறிக்கும் நாவால்
தென்றலும் தீயானதே என் வசந்தமும் வசமிழந்ததே

என் கண்களில் இனி நீரோட்டமா? என் வாழ்வே எனக்குப் போராட்டமா ?
இது நீ போடும் பேயாட்டமா? துன்பம்தான் எனக்கினி வேரோட்டமா?

என் செவிக்கு ஒலியே பகையானதே
என் சொல்லுக்கு மொழியும் நகையானதே
என் வானுக்கு நிலவும் எதிரானதே
என் மீனுக்கு நீரும் புதிரானதே
உனக்கு வாழ்வு தந்தேன் அதனால்
பெண்ணே எனக்கு நீ செய்த சதியா?
என் வாழ்வே இனி நோயாகும் விதியா?
இது தான் எனக்கு நேர்ந்த கதியா ?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (4-Nov-17, 12:16 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 78

மேலே