மனசெல்லாம் நிறைந்த என் மனையாளே

மஞ்சள் பூசிய முகத்தழகே!
மகராசி நீயே என் மனைக்கு அழகே !
மனையாள் உன்னைப்போல் யார் அழகே !
மாமன் மனசெல்லாம் நிறைந்த என் மனையாளே !
மாமனுக்கு பொருத்தமான பெண்மை நீதானே !
மல்லிகை பூவை சூடி நடந்து வார உன் அழக பார்த்து
மயங்கித்தான் போறேன் மாமன் நானே !
மணக்கும் மதுரை மல்லிதான் வாங்கித்தந்தேன் உன் மாமன் !
ஆசையா சூடிக்கிட்டு அருகே வந்து நின்னுகிட்டு !
அழகா இருக்கேனா மாமா னு கேக்குற !
ஆச மாமன் வச்ச கண் எடுக்காம உன்ன பார்த்துகிட்டே
நெருக்கமா உங்கிட்ட வந்து உன் காதுக்குள்ள ஒன்னு சொல்லி புட்டேன் !
அடியே கள்ளி ! இம்புட்டு தூரமா இப்புடி பயந்து ஓடுவ
இருள் வரும் நேரம் இன்னும் இருக்கோ !
இப்டியே பேசி பேசி ஏங்க வைக்கிறேயே என் மாமா
சீ ! போடா ! முரட்டு காளை முத்து மாமா "னு நீ
சொன்ன வார்த்தைய நெஞ்சுக்குள்ள நினைச்சு நினைச்சு
இன்னமும் தான் உன் நினைப்போட வாழுறேன் உன் மாமன் !
அயல் நாட்டுக்கு வந்து ஐந்தாறு வருஷம் ஆச்சு
ஆச பொண்டாட்டி உன்ன பாக்க சீக்கிரமே வாரேன்
உன் ஆச மாமன் !