ராஜஸ்தான் பெண்ணே
பாம்பை
வளையலாக்குகிறாய் -அதன்
விஷத்தை
பொட்டென வைக்கிறாய்..
ஏய்!
ராஜஸ்தான் பெண்ணே!
உன்னை காணும் நேரம்
அதட்டுகிறாய்..
என்னை
தேடும் நேரம்
உன் மூச்சிக்காற்றை
தூதனுப்புகிறாய்..
கூட்டத்தில் நீ ஒளிந்துகொண்டால்
காண்பதெப்படி? - ஆனால்
நான் மட்டும் காண்கிறேனே
அது எப்படி?
நீ இருக்கும் இடம்
பாலைவனம் ஆனதெப்படி?
கொஞ்சம் சிரித்திருந்தால்
அது என்றும்
சோலைவனமாகவே
இருந்திருக்குமடி.!