விழியே உனக்கே உயிராவேன்-1

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்
இது சரியா இருக்கு என எண்ணிக்கொண்டே தான் ரெடி
செய்த வீடியோவை சிடியில் பதிவு செய்தாள் ரசிகப்ரியா
(நமக்கு ரசிகா).அவள் மனமோ இது அந்த எருமைக்கு பிடிக்க வேண்டும் என
லேண்டிக்கொண்டது.
ரசிகா தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் யுவதி
பரத்(எருமை) அவளுடைய அலுவலக தோழன்இரண்டு
வருட நட்பு டாம் அண்ட் ஜெர்ரி போலதான் அவனுடைய
கல்யாணத்துக்கு சர்பைஸ் பண்ணதான் அவர்களது போட்டோக்களை
இணைத்து அந்த வீடியோவை ரெடி பண்ணியிருந்தாள்.
அவனுடைய கல்யாணத்திற்கு இன்னும் இரு தினங்களே உள்ளன.
அதற்குள் அவர்களது வானர சாரி சாரி நண்பர்கள் பட்டாளத்திடம் காட்டி சரி
செய்ய வேண்டும் என முடீவு.