உன் பார்வையின் காதல் கஸல்
கடலில் பிறந்த முத்துக்கள்
உன் இதழ்களில் சேர்ந்து
புன்னகை என்று பெயர் பெற்றது
நீரோடையில் நீந்திய மீன்கள்
உன் விழி மேடையில் அரங்கேறி
கயல் எனும் விருது பெற்றது
வானில் தவழ்ந்த பாதி நிலவு
உன் முகத்தில் வந்து பௌர்ணமி ஆனது
உன் பார்வையில் தவழும் காதல் கஸல்
பாவலர்க்கு தமிழில் பாடல் தந்தது !
------கவின் சாரலன்