மறு பிறவி

சிவந்த மண்ணில் புதைந்தேன்.
தளிர் விட்டு முளைத்தேன்.
தண்ணீர் குடித்து வளர்ந்தேன்.
உரம் உண்டு செழித்தேன்.
கிளைகள் பல விட்டேன்.
நிழலை பலருக்குக் கொடுத்தேன்.
பூக்கள் பலர் கவரப் பூத்தேன்.
தேனீக்ளை தேடி வரச் செய்தேன்.
சுவையான கனியானேன்.
சிறார்களிடம் கல்லெறி பட்டேன்.
அணில்கள் சுவைக்கும் பழமானேன்
ரசித்து உண்ண பழம கொடுத்தேன்
இறைவனுக்கு என்னை அற்பணித்தேன்
புயலில் நான் சரிந்தேன்
கேட்பார் அற்று கிடந்தேன்
என் முடிவை நெருங்கினேன்
அடுப்புக்கு காய்ந்த விறகானேன்
சுவைத்து எறிந்த என் பழத்தின் விதை
மண்ணில் மீண்டும் புதைந்ததினால்
மறு பிறவி நான் எடுத்தேன்


*****

எழுதியவர் : பொன் குலேன்திரன் – கனடா (7-Nov-17, 8:01 am)
Tanglish : maru piravi
பார்வை : 183

மேலே