இயற்கை-நதியின் எழில்கள்

மெல்ல மெல்ல நீ ஆடி வருகையில்
நதியே அதில் சிற்றிடை நங்கையின்
- நடையைக் கண்டேன்;சீற்றம் கொண்டு நீ
பாய்ந்து வரும் வெள்ளமாய் பெருக்கெடுக்கும்போது
ஊழி தாண்டவம் ஆடும் சக்தியாய், பார்வதியாய் கண்டேனே
உன்னை நான் நதியே !
நதியே! நீ சிற்றோடையாய் பிரிந்தால்
அதில் கேட்குதடி மழலையின் சிரிப்பு ,
மலையின் மடியில் நதியே,
நீ வரும் அழகில் எழில்மிகு
நடன நங்கையின் அழகு அத்தனையும் காண்கின்றேன்,
அங்கு நீ அருவியாய் மாறிவிட்டால்
அந்த ஓசையில் பிரணவ சபதம் ஒலிக்க கேட்டகின்றேனே,
நதியே நீ கடலில் சங்கமிக்கும் போது
கடலோடு உறவாடும் கடல் காதலியாய்
காண்கின்றேனே உன்னை
இத்தனை எழிலையும் அடக்கி நீ
பித்தா பிறை சூடியவன் சிரசில்
எழில் மங்கையாய் அமைதிகொண்ட
முகத்தோடு சிரிப்பு உதிர்க்கையில்
கங்கை அம்மனாய் தொழுகிறேன் உன்னையே
என்னே உந்தன் விந்தை தரும் எழில்கள் அத்தனையும் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Nov-17, 3:15 pm)
பார்வை : 422

மேலே