கடவுள்

உண்டென்பார்க்கு உண்டு, இல்லை என்பார்க்கு
இல்லை, உண்டு,இல்லை என்பது உன்மனதுள் சோதனை
அது தரும் தீர்வு அவனவன், 'அவனை, காணும் விதத்தில்
மனிதன் உள்ளவரை உண்டென்பார்க்கு அவன் உண்டு
இல்லை யென்பார்க்கு, 'இல்லை', இதைப்பற்றி
அவனுக்கென்ன கவலை , அவன் எப்போதும்போல்
எங்குமுள்ளான் , எதிலும் உள்ளான் , உள்ளே, வெளியே
எங்கும், எதிலும் , அணுவாய், அணுவுக்கும் அணுவாய்
கடலாய், மலையாய், காடாய், கோளாய்,நட்சத்திரங்களாய்
அண்டங்களாய்........அவனை காண்பதரிது ஆனால்
கொஞ்சம் முயன்றால் அவனை நீ உணரலாம்
அவனே,'அவன்' கடவுள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Nov-17, 1:53 pm)
பார்வை : 115

மேலே