தேங்கிய நீரால்

வாங்கிய மனையில் மாளிகை கட்டி
***மகிழ்வுடன் வாழ்திருந்தார்
தேங்கிய நீரில் தெப்பமாய் மிதக்கச்
***சிந்தையுங் கலங்கிவிட்டார்
நீங்கிடு மோயிந் நிலையென அவர்தம்
***நிம்மதி யிழந்துவிட்டார்
தாங்கொணாத் துயரால் தவித்தவர் மனம்தம்
***தவற்றினை உணர்ந்ததின்றே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Nov-17, 8:45 pm)
பார்வை : 70

மேலே