ஒட்பம் அவள்

ரசனைகளெல்லாம் அழகு
அவளைத் தவிர
ரகசியமெல்லாம் வெளிச்சம்
அவளைத் தவிர
அலைகளெல்லாம் ஒன்று
அவள் சுருங்குழழ் போல
புன்னகை விழுங்கும்
அவள் புறம் போல
ஓவியம் அவளிடம்
வண்ணங்கள் தேடையில்
ஒளிந்திருந்து பார்க்க
அழகியல் உதாரணம் அவள்
தேடலில் நான்
தெரியாமலே அவள்
உருவமில்லா அடையாளமே
இன்று என்னிடம்