நிழல்
நான் உன் நிழல் ஏன் தெரியுமா
தீயிட்டு எரியாது நிழல்
தீமை செய்தலும் உண்மையாய் இருக்கும் நிழல்
எட்டி மிதித்தாலும் பாதத்தை முத்தமிடும் நிழல்
வெட்டி சாய்த்தாலும் உடலோடு சேர்ந்து உதிரம் சிந்தும் நிழல்
சுடும் நிலத்தையும் முத்தமிடும் நிழல்
உறைபணியிலும் தேகம் குளிராது நிழல்
கடும் வெயிலிலும் நிழல் தரும் நிழல்
நீ அழுதால் சேர்ந்து அழுகும் நிழல்
குழியில் நீ தள்ள விழுந்தாலும் தானேஎழுந்து
மறுகணமே உன்னோடு சேர்ந்து வரும் நிழல்
உற்று கவனித்து பார் கூர் இருளிலும்
ஓர் அசைவுகளாய் உன்னோடு சேர்ந்திருக்கும் நிழல்
உயிர் பிரிந்தாலும் உன் உடல் விட்டு பிரியாது நிழல்
அதனால் தான் சொன்னேன் நான் உன் நிழல் என்று