கடவுளே நீ யாரோ
கடவுள் உலகை படைத்தான்...
அதில் உயிர்களையும் படைத்தான்...
பிற உயி்களை படைத்தவன்
புது முயற்சியாய் மனிதனையும் படைத்தான் போல...
மனிதனை படைத்தவன் அவனை
ஒழுங்குடன் படைக்காதது ஏன்?
அவனை தவறு செய்ய விட்டுவிட்டு
பின் தண்டனை கொடுப்பதுவும் ஏனோ?
இறந்த பின்னர்
சொர்கம்...நரகம் என பிரித்தவன்
வாழும் பூமியையே சொர்கமாய்
செய்திருக்கலாம் அல்லவா?
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றால்...
பச்சிளம் குழந்தை என உணராது
அக்குழந்தையை நசுக்கின்றவனை
ஆட்டிவைப்பது யாரோ?
செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும் எனறால்...
ஒன்றும் அறியா சிசுவிற்கு
என்ன பதிலோ?
எல்லாம் கர்மா என்றால்
கடவுள் என்ன செய்கிறான்?
உலகில் எண்ண முடியா கொடூரங்கள் அரங்கேரிக்கொண்டு தான் இருக்கின்றன...
தடுக்கும் சக்தி
எங்கே என்று தான் தெரியவில்லை...
கட்டவிழ்த்துவிட்டது போல்
எல்லா அவலங்களும்
நடந்துக்கொண்டிருக்க...
எதுவும் செய்யாமல் இருக்கும் கடவுளை என்னவென்று சொல்வது?
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவனை காப்பாற்றாதவன் மனித நேயமற்றவன்...
அவனையும் வேடிக்கைப்பார்க்கும்
கடவுளே நீ யாரோ?
படைத்த உலகினை பாதுகாக்க தவறியதற்காக கடவளே
உனக்கு தண்டனை தான் உண்டோ?
நீ இருக்கிறாயா என்று கேட்கவில்லை...
இருந்தால் என் உலகமும்
என் மக்களும் நன்றாய் இருப்பாரகளே
என்று ஆதங்கம் தான் கொள்கிறேன்!!!!!