நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....( tamil novel ) chapter 02

நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....     chapter 02   


சிறு வயது முதல் தான் கற்பனைகளில் அழகு என்ற அம்சத்தால் என்றுமே கவரப்பட்டவன், இயற்கை அழகிகள் மலைகள் , அருவிகள் , பல்லத்தாக்கு , பனிப்பிரதேசம் , மழை காடுகள் , பாலை சோலைகள் என பல அழகிகளை தேடிச்சென்று பார்த்தவனாயிற்றே. இருந்தும் தன் மனங் கவர்ந்த பெரபஞ்ச அழகி இந்த கடல். அவளிடம் ஆசையோடு மடியில் வந்து விளையாட அவளும் காதலுடன் கட்டி தழுவுவாள். அருவிகள் , ஆற்று நீர் கொண்ட சுவை நீர் இல்லை என்றாலும் , சீரில்லாத மேடும் பள்ளமும் , தன் ஆழத்தால் மூடி சரிசம வட்ட அழகை பூமிக்கு தந்தவள். எல்லாம் சமம் செய்ய அல்லும் பகலும் அயராத சலவைக்காரி , அவள் பெற்ற சன்மானம் தான் உப்பு. இந்த அளப்பறிய அன்பை உணா்ந்தவனாய் கனிவுடன் கண்ணயந்து தன்னை சுற்றி அரை வட்டமிடும் அலைகளில் கிடந்தான்.

அலைதந்த இளஞ்சூட்டை குளிர்வித்த காற்று ஈரம் காய தாய் போல் உடனே தலை துவட்டி சென்றது.  அலையால் காற்றடிகிறதா ? இல்லை காற்றால் அலையடிக்கிறதா? ஒன்றன் மீது ஒன்று உரசி நுரை போங்க இரைச்சலிட்டது. அதுவே அங்கு அமைந்த  ஆழ்ந்த அமைதிக்கு அழகு சேர்த்தது.

சிவந்த மஞ்சளில் மெல்ல கரைந்த கதிர்களின் பளபளப்பு மங்க கடலுல் முங்கியது சூரியன்.  அதே நேரம் தன் மெல்லிய வென்கீற்றுகள் சூழ சிப்பி உள்ளே முத்தை போல் பிரை நிலா. அங்கே வான் முழுவதும் வா்ன ஜாலம் கண்ட அவன் தான் வந்த இந்த நேரம் சரியானது என்று நிணைத்தான். அவனை எட்டிப் பார்த்த நண்டு, சற்று தொலைவில்
 நின்ற தென்னை மரங்கள் , இலகி அவன் கால்களில் சரியும் கடல் மண்ணுடன் தானும் இந்த மந்தகாச மாலை மட்டுமின்றி இரவுப் பொழுதையும் அங்கேயே கழிக்க முடிவு செய்தான். அருகே மாந்தோப்பின் பூ வாடை கடற்காற்றை சில சமயம் வீழ்த்தி அதில் ஒரு பூவும் காற்றில் தன் மேல் விழ , இது உண்மையில் ஒரு அதிசய இரவு தானோ? என்ற பூரிப்பில் அந்த சின்ன பூவை முத்தமிட்டு , தன் பசி மறந்து கண்ணயர்ந்தான்.

கண்ணயர்ந்த போதும் நிணைவுகள் அவனைவிட்டு நீங்க வில்லை. கடந்த காலம் விட்டுச்சென்ற நிணைவுகள் தன் அமைதி தேடும் மன வானில் மின்னலாய் தோன்றி மறைந்தன. செல்வசெழிப்பில் சீராடி வளரா விட்டாலும், அன்பிற்க்கு குறைவில்லாமல் ஒரே குல கொழுந்தாய் தன் பெற்றவர்கள் வளர்த்தார்கள். அதிலும் தன் தாய் அவள் தன்னை கருவுற்ற நாள்முதல் கோவில் கற்பகெரகம்போல் அவனை காத்தாள். அவன் கலையான அழகிய விழிகள் கண்டு தான் தினம் தொழுத பரமாநந்தனே கோபால கிருஷ்ணனாய் தன் மகனாக பிறந்தான் என பூரித்தாள். அவள் வளர்ப்பில் எறும்பின் கடி கூட அறியாது தன் கண்மலர் நீர் பாராது அன்றளர்ந்த பூவான தன் சிரித்த முகம் நிதம் அவள் முத்தமிட வளர்ந்தவன். இன்று அவன் அவை எல்லாம் தொலைவில் விட்டு தனியனாய் மனம் முழுக்க நிணைவுகள் இந்த கடல்நீர் சாரல் போல் அவனை நனைக்க படுத்து இருந்தான்.



to be continued...

Please share your valuable comments 😃
Please visit
tamilnovelofsrikavi.blogspot.in for next chapters

எழுதியவர் : sri (10-Nov-17, 9:46 am)
சேர்த்தது : srikavi 110
பார்வை : 107

சிறந்த கவிதைகள்

மேலே