வளர்பிறையாய் என்னுள் வளர்ந்திட வா

நீ யார் என்று அறிவேன்...
உன் முகம் மட்டும் அறியேனே...
சில மாதங்கள் உனக்கான
கருவறை வீட்டில்
தங்கிக்கொள்ள வாராயோ
என் கண்மணியே!
வளர்பிறையாய் என்னுள்
வளர்ந்திட வா...
தேய்பிறையாய்
என் துன்பங்கள் யாவும்
தேய்ந்து போகட்டுமே
வா கண்ணே வா..!
என் தாயிடம்
கண்டச் சுகம் யாவும்
உனுக்கு தந்திடவே
காத்திருக்கிறேன் உன் தாய்...
என்று வருவாயோ
என் பொற்சிலையே!
உன்னால் மாங்காய் தின்னும்
சுகம் எனக்கு வேண்டாமா?
உன் பேர் சொல்லி உன் தந்தை
என்னை தாங்கிட வேண்டாமா?
என்று என்னுள் பால் பொலிவாய்
என் பால் நிலாவே!
பாலூறும் மார்பில் நீ
பசியார வேண்டும்....
பிறவி பயனை நானும்
அடைந்திட வேண்டும்...
வரம் ஒன்று தந்து
வருவாயோ என் பூந்தளிரே!
மலடி என்று
மனம் நோகாமல்
கூறுவோரிடம்
உரக்கச் சொல்லிட வாராயோ
என் பொன்மணியே...
இவள் என் தாய் என்று!
காத்திருக்கிறேன் உனக்காய்...
கருவறையில் உந்தன்
புனித பாதங்கள் பட்டிட...
கண்ணீருடன் தவம் கிடக்கிறேன்...
அம்மா என்றழைத்திட வாராயோ
என்னுயிரின் உயிரே!!!!