தமிழ் எம் உயிர்

தமிழ் என்று பெருமை கொள்வோம்...
தமிழால் இணைவோம்...
தமிழாவோம்...
------------------------------------------------------

மாவீரன் அலெக்சாண்டர் என்று படித்த நாம்...

திருக்குறள்...

சங்க இலக்கியங்கள் , எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,மூவேந்தர், பல்லவர், வள்ளல்கள், புலவர்கள்.... ஐம்பெருங்காப்பியங்கள்,இலக்கணம்....
இன்னும் பற்பல.......................படிக்கவில்லை...
தமிழ் சங்கங்கள், குமரிக்கண்டம்.... அறியவில்லை...உணரவில்லை...

#தமிழ்நாடுபாடத்திட்டம்
என்னங்க ஐயா உங்க திட்டம்

தமிழே(தமிழர்களே)...
தமிழிற்காக என்ன செய்தோம்...
தமிழில் பேச எழுத படிக்கவேனும் தெரியுமா?

அடையாளத்தை மறந்து விடாதீர்கள்...
இழந்து விடாதீர்கள்...

தாய் மொழியே ஒருவரின் அடையாளம்...
தமிழ் மொழியே நம் அடையாளம்...

உலக மொழிகள் அனைத்தையும் மதிக்கிறோம்...
எம் தமிழே எம் அடையாளம் என்று சொல்வோம்...

இந்தியனே அபகரிக்காதீர் எம் அடையாளங்களை...
சிதைக்காதீர் எம் உணர்வுகளை...

இந்தியை உலக மொழிகளில் ஒன்றாக
ஒரு இனத்தின் உணர்வாக அடையாளமாக மதிக்கிறோம்...
அதே சமயம் வேலி கடந்து பயிரிடப்பார்க்கும்
இந்தி திணிப்பை தமிழ்நாட்டில்
தமிழச்சியாக எதிர்க்கிறேன்...

எம்மொழியால் எல்லை கடந்து இணைவோம்...
எம்மொழிக்காக எல்லை இன்றி (இந்தியா என்றல்ல. உலக நாடுகள் எதுவாகினும்) வாதாடுவோம்...போராடுவோம்...

தமிழ்நாடுதமிழீழம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்...
குமரிக்கண்டம்...

சிலர் எங்களை பிரித்து வைக்க பார்க்கிறார்கள்...
தெலுங்காவது இரண்டாகத்தான் பிரிந்தது...
தமிழ்நாடு நான்காக பிரியும் என்று சொல்லி.

நல்ல நகைச்சுவை...
நாங்கள் தனி நாடு தான் கேட்போம்...
தமிழ்நாடு தான் கேட்போம்...
தமிழ் தான் எங்கள் உயிர்...

இன்னும் சிலருக்கு

தமிழீழம் தமிழ்நாடு என்று இரு நாடுகள் தானே
ஆம் நாடுகள் பல வாகினும்
.எந்த நாட்டில் வாழ்ந்தாலும்
நாங்கள் ஒன்று தானே...
எங்கள் எண்ணம் ஒன்றே தானே...
எப்பொழுதும் எதிலும் தமிழ் தானே...
எங்கள் தாய் தானே...
குமரிக்கண்டத்தில் பிறந்தவர்கள் தானே...

தமிழீழம் தமிழ்நாடு மலரும்....

எங்களை எதனாலும் பிரிக்க முடியாது...
சாதி, மதம், கடல், நாடுகள் எவற்றாலும்...
நாங்கள் எங்கே இருந்தாலும் தமிழர்கள்...

கடல் கடந்து நாங்கள் கட்டிக் கொள்வோம்...
தமிழை ...எம் தாயை ...

தமிழ் எங்கள் உயிராகும்...

உலக மக்களே
உம் அடையாளங்களை இழந்து விடாதீர்கள்...
உலகின் முதல் மொழியை தமிழை தாய்மொழியாக பேசும்
உங்கள் தோழி தமிழச்சி பிரபா கூறுகிறேன்.

உலகில் பல மொழிகள் அழிகின்றன.
மொழிகள் அழிந்தால் இனங்கள் அழிகின்றது என்ற பொருளும் உண்டு...
உலகில் பல இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்றன...
இயற்கை வளங்கள் அழிந்தால் உலகமே வாழ்வாதாரத்தை இழந்தது என்று பொருள்.
இவ்விரண்டையும் தமிழ்நாட்டில் நாங்கள் உணர்கிறோம்...

தாய் மொழியில் பேசுங்கள்...
இயற்கையை மறந்துவிடாதீர்கள்...

இந்தி அழிந்தாலும் எங்களுக்கு
இந்தியர்களின் உணர்வு புரியும்.
ஏன் என்றால் எங்களுக்கு எப்படி தமிழோ அப்படி தானே அவர்களுக்கு இந்தி...

அவர் அவர் அவரவருடைய தாய் மொழியில் பேசுங்கள்...
வேற்று ஆள் யார் மீதும் உங்கள் மொழியை திணிக்காதீர்கள்...

ஆங்கிலம் உலக மொழிகளை அழித்தது போலவே...
இந்தியாவில் இன்று இந்தி திணிப்பு உள்ளது.

நீ ஒரு மொழியை அழித்தால்
உன்னை அழிக்க வேறு மொழி வரும்...

உதாரணம் : சமஸ்கிருதம் - இந்தி - ஆங்கிலம்

நீங்கள் உங்கள் தாய்மொழியை இழந்து விடாதீர்கள்...
உம் தாய்மொழியின் தாய்மொழி...
எம் தாய்மொழி ...
எம் தமிழ்மொழி...
தாய் அதை ஏற்கமாட்டாள்...

அயல் மொழி ஆயிரம் வந்தாலும்
தாய்மொழியை மறக்கலாகுமா?
தாய்மொழியை மறப்பது
தாயை மறப்பதாகுமே....

தமிழில் பேச பெருமைப்பட்டு
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

இந்த இயற்கை எல்லோருக்கும் பொதுவானது...
நான் நீ ஏதும் இல்லை...

பிரபஞ்சத்தில் இயற்கையை அழித்தால்
நாம் ஏது?
சுவாசிக்காமல் வாழ முடியுமா....

நீரை பணம் கொடுத்து வாங்குவது தான் முறையா...

விவசாயத்தை அழித்து விட்டு என்ன செய்யப்போகிறோம்....

வாழ இயலுமா இயற்கை விவசாயம் இல்லாமல்...

மொழி இன்றி நாம் அகதியாவோம்...
இயற்கை விவசாயம் இன்றி நாம் இறந்து போவோம்

இயற்கை இன்றி யாரும் இல்லை.

நீ இயற்கையை அழித்தால்
உன்னை செயற்கை நின்று கொல்லும்..

சிந்தியுங்கள் மனிதமே...

இதயம் உள்ளவர்கள் அனைவரும் மனிதர்களா என்று தெரியவில்லை..

உயிரின் உணர்வுகளை , அடையாளங்களை, இயற்கை வளங்களை, மொழிகளை மதிப்பவர்கள், வளர்ப்பவர்கள்...
மனிதர்கள்...
முக்கியமாக அனைத்து உயிர்களையும் மதிப்பவர்கள் ....

உலகமே...
பிரபஞ்ச மொழிகளை அழித்து விடாதீர்.

இந்தியாவே
இந்திய மொழிகளை அழித்து விடாதீர்
இந்தியால்...

நீ அல்ல
யார் நினைத்தாலும்
பிரபஞ்சத்தின் முதல் மொழியை
எம் தமிழ்த்தாயை
அழிக்க முடியாது...

#வாழ்க_செந்தமிழ்

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Nov-17, 5:47 pm)
Tanglish : thamizh yem uyir
பார்வை : 542

மேலே