பூத்திருக்கும் மனம்

புதையவில்லை..
பூத்திருக்கிறேன் புதுமைப்பித்தனாய்...
மனம் பூத்திருக்கிறேன் புதுமைப்பித்தனாய்...

அன்பின் ஆழம் என்ன?
அளவிட்டவர் யார்??
பண்பின் மேன்மை என்ன?
அனுபவித்தவர் யார்??

உலகத்தவர் வாழ்க்கையில் காணும் காட்சி யாவும் மாயையென்று மாறிவிடவே,
போறாமைமிகு மன நோய் போக்க மருந்து ஒன்றைத் தேடுகிறேன்...

மென்மையானவனைக் கிள்ளிப்பார்ப்பதும், வலியவனைக் கண்டு அலறுவதும் இவ்வுலகின் இயற்கையாகி போனதாலே,
மெலியவன் வீழ்கிறான்..
வலியவன் வாழ்கிறான்...

கூர்வாளால் நெஞ்சில் குத்திக் கொல்லும் விரோதியை விட கூடவே இருந்து குழி பறிக்கும் குள்ளநரிகளே அதிகமாகிவிட்ட காரணத்தாலே,
அனைவரும் கவனமாக இருங்கள்...
உங்கள் மன அழுக்கை முதலில் அலசிக் கொள்ளுங்கள்...

பார்வையின் அர்த்தம் புரியும்...
கன நொடியில் காட்சியாவும் மாறும்...
ஒழுக்கத்திலிருந்து தவறியவன் வாழ்க்கையே என்றும் ஒழுங்காக அமைந்துவிடாது...

நேர்மைக்கு நேர்மை பக்கபலமாகும்...
கயமைக்கு கயமை துரோகம் செய்யும்...
கூட்டம் கண்டு ஆடாதே...
தனியாளென்று எண்ணாதே...
எனக்குள் ஒரு பிரபஞ்சம்...
அதற்கு நானே அரசன்...
உனக்குள்ளும் இருக்கிறது...
அதுவே உன்னை ஆள்கிறது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Nov-17, 8:56 pm)
Tanglish : poothirukum manam
பார்வை : 3761

மேலே