தெய்வங்களும்
ஏதோ ஒரு
மூலையில் வாழ்கிறேன்
கண்முன்னே
உலகை
ரசிக்காமல்.....
தேடும் கண்கள்
தவிக்க
நீ..... வாழும்
தேசம் தெரியாமல்
என்
வாழும் காலம்
சோகமாய் மாறியதே.....!!
தேடித்
தேடி
தேய்பிறையாய்
தேய்கிறேன்......நம்
காதல்
நினைவுகளோடு
மெல்லச்
சாய்கிறேன்......
உன்நினைவில்.....!!
காதல்
ஏதோ
சொல்லுதடி
காரணம்
புரியாமல்
கொல்லுதடி.....
என் ஜீவன்
உன்னை
மறக்காது
மரணிக்கும்
வரை.....!!
தெய்வங்களும்
வஞ்சித்தே
போனது.....
வாழ்க்கையில்
சோகங்கள்
நம்மை
மிஞ்சுதடி....
என்னுயிரும்
சாவுதனை தொட்டுத்
தொட்டு
திரும்புதடி.....
உன்னோடு
வாழவே
உயிரும்
விரும்புதடி....!!
துன்பங்களை
மட்டுமே
சுவாசிப்பேன்
என்றால்
இந்த
சுவாசமும்
நின்றே
போகட்டும்.....
இவன்
கோபம்
இவனோடு
போகட்டும்......!!
கடவுளின்
பிழை
என்று
சொல்லவா.....?
உள்ளத்தில்
நிரம்பிய
கருணையை
சொல்லவா?
பாசத்தின்
தவிப்பை
பாதாளத்தில்
தவிக்கவிட்டது
ஏனடி.....?