கருப்பு பாவை
கருப்பு அவள் கற்பூரமாய் பிடித்துவிட்டால்
வாகனம் போல் கடந்து செல்கிறாள்
வாஞ்சை என் நெஞ்சை கடத்தி செல்கிறாள்
கருப்பட்டி நிறம் தான் அவள்
இருப்பினும் ஒருகோடி அழகு அவள்
காந்தமும் கருப்புதான் இருப்பினும்
மினுக்கும் இரும்பினை ஈர்ப்பது போல்
ஈர்த்துவிட்டாய் என்னை
அவள் பாதசுவடு அச்சினை பார்த்தபடி
ஒரு நாய்க்குட்டியினை போல் எச்சிலை வடித்தபடி
நானும் முகர்ந்த படி உன் முகவரி தேடி அழைக்கிறேன் காற்றோடு
சேலை கட்டிய கருப்பு வானவில் தோழியே நீ
தேவை இல்லாமல் தொட துணியும் ஆணை எரிக்கும் நெருப்பு கோழியோ நீ
பேசி இருந்தால் கிடைத்திருக்குமா உன் தொடு திரை என்னும்
என் நாசி நுகர்ந்தால் உன்னை தேடி அழைக்கிறேன் இன்னும்
ஆறடி சிலை நீ யாரடி சிலை நீ
கறுப்பாயினும் கருவறையில் இருக்கும்
தெய்வமென உன்னை கைப்பி வணங்குகிறேன்
மை நிறம் கொண்ட தாமரையே
கண் இமைப்பதற்குள் நீயும் காணலையே
இப்படி உன்னை இழப்பேனென எனக்கும் தோணலையே
நூறு கோடி வெண்மை கண்ணுக்கும் கரு விழி தான் அழகு சேர்க்கும்
உச்சமது சிவப்பாயினும் சிறு மச்சமது அழகு சேர்க்கும்
உடலே மச்சமோ இதுதான் அழகின் உச்சமோ பெண் பாவையே
போதுமடி உன் அழகு என்னை வாடுதடி என்னிடம் கொஞ்சம் பழகு
வெறும் தேதிகளை கிழித்தபடியம் காத்திருக்கிறது கைகளில் தாலிக்கொடியும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
