கட்டற்ற சிந்தனை வேள்வி
கட்டின்றி சிந்திப்பது சாத்தியமா?
மன மொழி ஆராய்ச்சியில் அடுத்த கட்டமாக கட்டின்றி சிந்திப்பது எப்படி?
சிந்தனையொன்றே மனிதனின் ஒளிவிளக்கு...
அச்சிந்தனை அகிலத்திற்கு பிரகாசமளிக்க வேண்டுமானால் கட்டின்றி சிந்திப்பதும் அவசியமே...
கட்டற்ற சிந்தனை அளவில்லா அன்பினை அடிப்படையாகக் கொண்டது...
அன்பே இறைவன்...
இறைவனே அன்பு...
கட்டற்ற சிந்தனையில் பயம் தொற்றிக் கொள்ளாது...
கட்டற்ற சிந்தனையில் கவலை பற்றிக் கொள்ளாது...
கட்டற்ற சிந்தனையில் சுயநலம் சூழ்ந்திருக்காது..
கட்டற்ற சிந்தனையில் ஆசை ஆட்டிப் படைக்காது..
கட்டற்ற சிந்தனையில் ஆண், பெண் போன்ற வேறுபாடுகள் பல மறைந்து போகும்..
கட்டற்ற சிந்தனையில் பொறாமை அழிந்து சந்தேகமில்லா பொறுமை விழித்தெழும்..
கட்டற்ற சிந்தனையில் கோபம் கலவாது..
கட்டற்ற சிந்தனையில் பழியுணர்வு பலியிடப்படும்...
கட்டற்ற சிந்தனையில் காலத்திற்கு காலன் வருவான்...
கட்டற்ற சிந்தனையில் நித்தியமானதே புலப்படும்...
கட்டற்ற சிந்தனை சாபமிடாது...
கட்டற்ற சிந்தனை பாவமாற்றாது...
கட்டற்ற சிந்தனை சகலத்தையும் ஆராய்ந்து பார்க்கிறது...
கட்டற்ற சிந்தனை கருணையூற்று ஆதலால் உணர்வுகளை புரித்து புண்படுத்தாமல் மதிப்பளிக்கிறது...