ஒரு கிராமம் மாறுகிறது

காலத்தோடு ஓரு மண்ணில் வாழும் மக்களின் கலாச்சாரம், அறிவ, தேவைகள் மாறுகிறது. அது போல பழமையில் ஊறிய ஒரு குக் கிராமம் எப்படி மாறுகிறது என்பதே உண்மையும் கற்பனையும் கலந்தது இக்கதை.
இலங்கையில் ராஜரட்ட எனப்படும் அனுராதபுர மாவட்டத்தில் வரலாறு உள்ள ஒரு கிராமத்தின் கனி வளம் எவ்வாறு சூழலையும் மக்களின் . காலச்சாரத்தையும் , வரலாற்றை மாற்றி அமைத்தது என்பது தான் இந்தக் கதை.
“எப்பாவல” கிராமம் அனுராதபுரத்தில் இருந்து தேற்கே 20 கி மீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் தலவ்வ மாவட்டச் செயலாளரின் பரிபாலானத்துக்குள் அடங்கும். தம்புத்தேகம , கெக்கிராவா, தலவ்வ ஆகிய ஊர்களுக்கு செல்லும் பாதைகள் சந்திக்கும் முற்சந்தியில் எப்பாவல கிராமம் அமைந்துள்ளது . அக்கிராமத்தை சுற்றி பல குளங்கள்,. வயல்கள் மக்களின் விவசாயத்துக்கு உயிர் நாடியாக இருந்தன. குளங்கள் இருந்ததால் பறவைகளுக்கும் மான். சிறுத்தை . நரி. கரடி போன்ற . வன வனவிலங்குகளுக்கும் பாலை. முதுரை காட்டு வேம்பு போன்ற மரங்களுக்கும் , பூச் செடிகளுக்கும் குறைவில்லை பண்டைய நகரமான. எப்பாவல பொஸ்பேட்; ( Phosphate) கனிவளம் நிறந்த கிராமம். விவசாயம் மக்களின் பிரதான- தொழில். தலவ்வ ரயில்வே ஸ்டேஷன் கிராமத்தில் இருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. ஊர் பிள்ளைகளின் கல்விக்கு ஒரு பாடசாலையும் உண்டு.
ஆயுர்வேத வைத்தியர் ஜெயசேன எப்பாவல கிராமவாசிகளால் மதிக்கப்பட்டவர் கிராமத்து ஜோதிடர் ஆரியரத்தினா சொல்லும் வாக்கில் ஊர் வாசிகள் முழு நம்பிக்கை வைத்திருந்தனர். அவர் தாதுசேன மன்னர் காலத்து பழம் ஏடுகளை வைத்து ஜோதிடம் சொல்வார் அவர் சொன்னார் : “எப்பாவலவுக்கு ஒரு தத்து இருக்கிறது. ஆனால் அதில் இருந்து அவுக்கன புத்தர் காப்பாற்றி விடுவார்” : என்று. அவர் சொன்னது ஊர்வாசிகளுக்கு புரியவில்லை

ஆயுர்வேத வைத்தியர் ஜெயசேனாவின் தந்தையும் பாட்டனாரும் எப்பாவல கிராமமத்தில் வைத்தியம் செய்தவர்கள். எப்பாவல மக்கள் அரசாங்க டிஸ்பென்சரிக்கு போவது குறைவு. காரணம் மேற்கத்திய வைத்தியத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மூலிகைகளில் தயாரித்த மருந்துகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை அதிகம் . அக்கிராமத்தில் உள்ள பழமையான பௌத்த விஹாராவின் பிரதம புத்த பிக்கு. மஹானாம தேரோவை அறியாதவர்கள் இல்லை. அவரின் வழிநடத்ததினால் அவ்வூர் அவ்வசிகள் மது.. சிகரெட் குடிப்பதில்லை. களவு. கொலை சண்டை என்பது அருமை ; ஓற்றுமையாக வாழ்ந்தனர் எப்பாவல மக்கள் பழம் நம்பிக்கைளில் இருந்து மாறாதவர்கள்
அக்கிராமத்தில் கல் வீடுகளை விரல் விட்டு எண்னலாம் . அதில் பழமையான நான்கு அறைகளை கொண்ட கல் வீடு ஜெயசேனாவியன் வீடு . அது அவர் பூட்டனார் கட்டிய வீடு.. அந்த கிராமத்துக்கு பஸ் மூன்று வருசங்களுக்கு முன்பு வந்தது. அது மட்;டும். பக்கி கரத்தையும் , கால் நடையும் சைக்கிளும் அவர்களின் பயணத்துக்கு உதவியது.. இரு வருடங்களுக்கு முன். ஒரு தென்னம் தோட்டம் வைத்திருந்த முதலாளியும் ஜெயசேனா மட்டுமே மொரிஸ் மைனர் காரும். . ஹில்மன் காரும் அக்கிராமத்தில் வைத்திருந்தனர் கிராமத்தில் சாதி வேற்றுமை இருக்கத்தான் செய்தது; ரோடியோ சாதியைச் சேர்ந்த சிலர் ஒதுக்குப் புறத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் சுடலையில் பிரேதம் எரிக்கும் வேலை, கூலி வேலை செய்து பிழைத்தனர் பாறை அடிப்பதும் அவர்களின் தொழில் .ரோடியோ சாதியினர் தாதுசேன மன்னர் காலத்தில் அடிமைகளாக இருந்தவர்களின் வழி வந்தவர்கள்
ஜெயசேனவின் பூட்டனார் ஒரு விவசாயி. அதோடு அவர் உடைவு முறிவு வைத்தியர் என்பதால் யோதஏல அருகே ஒரு எக்கர் காணியில் மூலிகைகள். வளர்த்து வந்தார் . பக்கத்துக்கு ஊர்களில் உள்ள ஆயர்வேத வைத்தியர்கள் தங்களுக்குத் தேவை பட்ட மூலிகைகளை அவரிடம் வந்து பெற்றுச் செல்வர் மூலிகைத் தோட்டத்தை , பராமரிக்கும் பொறுப்பு ஜெயசென மேல் விழுந்தது .. அந்த மூலிகை தோட்டத்தில் தாதுசேன மன்னர் காலத்து கல்வெட்டு ஒன்று இருந்தது. . அந்த கல்வெட்டு பதிவில் யோதஎலவில் கலாவெவ குளத்தில் இருந்து வாய்க்காலில் ஓடும் நன்நீரை அசுத்தப் படுத்தினால் ராஜரட்டவில் உள்ள , வயல்களில் வளரும் பயிர்கள் சீரழிந்துபோகும் என்று . பல நூற்றண்டுகளுக்கு முன் பதிவாகி இருந்தது . எப்பாவல ஊர் வாசிகளும் சுற்றுப்புற ஊர்வாசிகளும் அதை தெய்வ வாக்காக கருதி யோதஎல நீரை புனித நீராகக் கருதி அசுத்தப் படுத்துவதைத் தவிர்த்தனர்
கலாவேவ குளத்தைக் கட்டுவித்த தாதுசசேன மன்னனால் ஸ்தாபிச்கப்பட்ட 42 அடி உயரமுள்ள அவுக்கன புத்தர் சிலை பாதுகாப்பு, சமாதானம், இரக்கம் மற்றும் அச்சம் ஆகியவற்றைக் குறிக்கும் அபயமுத்திராவோடு கிராமத்தை பாதுகாக்கும் சிலையின் கோபத்துக்கு ஆளாகவேண்டி வரும் என்பது ஊர்வசிகளின் நம்பிக்கை
ஜெயசேனாவின் ஒரே மகன் ராஜசேனா அனுராதபுரத்தில் உயர் கல்வி கற்று பேராதனை பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் விஞ்ஞானத் துறையில் (Environmental Science )படித்துப் பட்டம் பெற்றவன்.
சுற்றுச்சூழல் விஞ்ஞானம் என்பது சுற்றுச்சூழலின் உடலியல், உயிரியல் மற்றும் தகவல் அறிவியல்கள் சுற்றுச்சூழல், உயிரியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கனிப்பொருளியல், கடல்வழி, உயிரியல், மண் விஞ்ஞானம், புவியியல், வளிமண்டலவியல் அறிவியல் மற்றும் புவிஇயற்பியல் உள்ளிட்டவைகளை ஒருங்கிணைக்கிறது. , மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகள் தீர்வு, சுற்றுச்சூழல் விஞ்ஞானம் அறிவியலின் போது இயற்கை வரலாறு மற்றும் மருத்துவம் துறைகளில் இருந்து வெளிப்பட்டது. ராஜசேனாவின் கிராமத்தில் 1970இல் கண்டுபிடிக்கப்பட்ட பொஸ்பேட் (Phosphate) என்ற வெள்ளை உப்பு கனிவளம் எப்பாவெல கிராமத்தையே மாற்றி விடும் என்று ஊடகங்களில் செய்திகள் வநதன
*****
ராஜசேனா தன் கிராமத்தையும் ஊர்வாசிகளையும் அழிவில் இருந்து காப்பற்ற வேண்டும் என முடிவெடுத்தான் ஒரே துறையில் படித்த ஆறு மாணவர்கள் அவனோடு ஒத்துழைக்க சம்மதித்தனர் அதில் இருவர் தமிழரும் ஒருவர் இஸ்லாமியரும். மற்ற மூவரும் சிங்களவர்கள். அவர்கள் கிராம பாதுகாப்பு என்ற பேரில் குழுவை உருவாக்கினார்கள் கிராமவாசிகளுக்கு பொஸ்பேட் சுரங்கத்தை தோண்டுவதால் கிராமத்துக்கு ஏற்றபடும் விளைவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல கருத்தரங்குகள் நடத்தினார்கள். அறிவியலின் மூலம் விளைவுகளை பின் தங்கிய கிராம மக்களுக்கு எடுத்து சொல்வது அவர்களுக்கு பெரும் பாடாயிற்று. கிராம பாதுகாப்பு குழுவில் இருந்தவர்கள் சரளமாக சிங்களம் பேசக் கூடியவர்கள் அது ராஜசேனாவுக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்த போராட்டம் மதம் இனம் மொழி கலக்காத போராட்டம். ஊர் வாசிகளின் வருங்காலத்தை பாதிப்பில் இருந்து காக்கவே இக் குழு கூடியது என்பதை பல மக்களை சந்தித்துச் சொல்லி அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்து குழு எடுத்து சொன்னது அனுராதபுர மாவட்டத்தில் உள்ள படித்த வாலிபர்கள் ஒன்றிணைத்து கிராம பாதுகாப்பு குழு வின் உண்ணாவிரத மறியல் போரட்டங்களை பொஸ்பேட் கனிவளத்தை தோண்டும் நிறுவனத்துக்கு முன் நடத்தினார்கள். அது அரசால் அனுமதிக்கபட்ட நிறுவனம். இந்த கனி வளம் அரசின் சொத்து. இதில் தலையிட உங்களுக்கு உரிமையில்லை. அதனால் ஏற்படும் பாரதூரமான் விளைவுகளை நீங்க சந்திக்க வேண்டி வரும் என்றார் நிறுவனத்தின் தலைவர். ஊடகங்கள் ராஜசேனாவை நேர்காணல் கண்டு எவ்வாறு கிராமம் பாதிப்பு அடைகிறது என்று துருவித் துருவி பல கேள்விகள் கேட்டார்கள்.

ராஜசேனா அவர்களுக்குச் சொன்னான்
“ காலாவெவவிலிருந்து நீர் யோதஎல கால்வாய் வழியே பல குளங்களுக்கு போகிறது. கால்வாயிலிருந்து திஸ்ஸவெவ வரை 11,400 ஏக்கர்) நெல் நிலங்கள் மற்றும் 120 சிறிய குளங்களுக்குப் போகிறது சுமார் 180 சதுர மைல்) பரப்பளவில் நீர் வயல்களுக்கு உணவாகிறது.இது அசுத்தப் படுத்தப் பட்டால் மக்களின் விவசாயம் வெகுவாக பாதிகப்படும் குடி நீர் அசுத்தப் படுத்தப் படும். நாட்டில் வேளாண்மையை வளர்ப்பதற்காக தாதுசேனா மன்னர் பதினெட்டு குளங்களைக் கட்டினார் அக் குளங்களை யோதஎல என்ற வாய்க்கால் மூலம் இணைத்தார் இது ஒரு சிறந்த தொழில்நுட்ப சாதனையாக இன்று கருதப்படுகிறது.


நமது கிராமத்தில் சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 60,000,000 மெட்ரிக் டன் பொஸ்ஸபேட்டுகள் 1971 ஆம் ஆண்டில் அரசு புவியியல் திணைக்களம் அப்படைட் (apatite) என்ற வெள்ளை பொஸ்பேட் உப்பை கண்டு பிடித்தது. இது நம் நாட்டின் பொருளாதாரத்தை ஊயர்த்த உதவும். என்கிறது அரசு 1974 இல் அரசு கட்டுப்பாட்டில் லங்கா பாஸ்பேட் கம்பனி , உருவாக்கப்பட்டது. அது உருவாக்க முன் அரசு எங்கள் ஊர் வாசிகளோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவில்லை
1987 ஆம் ஆண்டு, ஒரு அமெரிக்க நிறுவனமான ஃப்ரீபோர்ட்-மெக்மோரன் பேபன் என்றபெயரில் அது இயங்கத் தொடங்கியது. . அமெரிக்க நாட்டின் தலையீட்டின் பின் அரசியல் நுழைந்தது. அது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது”

ஊடகவியலாளர் ஒருவர் ராஜசேனாவைப் பார்த்துக் கேட்டார்:

“பொஸ்பேட்டின் பயன்கள் என்ன?. எதுக்கு அதை பாவிப்பார்கள்”?

“விலங்குகள் கால்சியம் பாஸ்பேட் ஊட்டச்சத்து கூடுதல் செய்ய பயன்படுத்தப்படுகிறது. தொழிற்துறை பயன்பாட்டிற்காக இரசாயனங்களை தயாரிக்க தூய பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்திற்கான பொஸ்பேட் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கை பொஸ்பேட் எஸ்டர்கள் முக்கியமாக புரதச்சத்து நிறைந்த உணவுகள், பால் பொருட்கள், மீன், இறைச்சி, மற்றும் முட்டை ஆகியவற்றில் காணப்படுகின்றன. . பாஸ்பேட் கூடுதல் கூட இறைச்சி துறையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது,. தாவரங்களுக்கும் பாஸ்பரஸ் முக்கியத்துவம். என்பது தாவரங்களின் சிக்கலான நியூக்லிக் அமில அமைப்புகளின் ஒரு கூறு ஆகும், இது புரதக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துகிறது. எனவே, பாஸ்பரஸ் என்பது உயிரணுப் பிரிவு மற்றும் புதிய திசுக்களின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.
பாஸ்பரஸ் மண்ணில் சேர்ந்து குறைந்த வேர் வளர்ச்சி மற்றும் குளிர்கால நெகிழ்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது, பெரும்பாலும் முதிர்ச்சி துரிதப்படுத்துகிறது. பாஸ்பரஸ் குறைவாக உள்ள தாவரங்கள் வளர்ச்சியில் வளர்ச்சியடைந்து, பெரும்பாலும் அசாதாரண இருண்ட-பச்சை நிறம் கொண்டவை. சர்க்கரைகள் அதிகரித்து, ஆத்தோசியானின் நிறமிகளை உருவாக்கி, சிவப்பு-ஊதா நிறத்தை உருவாக்குகின்றன. இதை குறைந்த பாஸ்பரஸ் தளங்களில் வசந்த காலத்தின் துவக்கத்தில் காணலாம். இந்த அறிகுறிகள் வழக்கமாக மிகவும் குறைந்த பாஸ்பரஸ் மண்ணில் தொடர்ந்து நீடிக்கின்றன..
பாஸ்பரஸ் அடிக்கடி ஆரம்ப வளர்ச்சியை அதிகரிக்க பயன்படுத்தப்படும் விண்ணப்பிக்க உரம் பரிந்துரைக்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் விளைச்சல் அதிகரிப்பிலிருந்து அதிக லாபம் பெறும் வேதியியல் பயன்பாட்டின் ஒப்பனை விளைவுகளை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

மேம்படுத்துவதற்கான திட்டம் இது குறைந்த உழைப்பு ஊக்கமளிப்பதாக இருந்தது, அதே நேரத்தில் நிதி நலன்கள் இன்னும் உள்ளூர் மக்களுக்குச் சென்றன. பால் ஆலைகள் ஒரு முதல் படியாக அறிமுகப்படுத்தப்பட்டன. டாக்டர் கிறிஸ்டோபர் பனபோகே என்ற மண் விஞ்ஞானி தன் முதல் புத்தகத்தில் எப்பாவெல, அபிவிருத்தி என்ற பெயரில் கலாச்சார மரபு அழிப்பு என எழுதினார் அது உண்மை தலவாவில் இருந்து ரயில் மூலம் காங்கேசன் துறை மற்றும் காலி சீமெந்து தொழிற்சாலைகளுக்கு அபேசிட்டை இரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது”

“ அது சரி போஸ்பேட் சுரங்கங்கள் சூழலுக்கு என்ன விளவுகளை கொடுக்கும்”? இன்னொரு ஊடகவியலாளர் கேட்டார்

“சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரின் மீது பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சுரங்கங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக ஆர்செனிக், சல்பூரிக் அமிலம், மற்றும் பாதரசம் அல்லது உட்பகுதிகளில் குறிப்பிடத்தக்க பகுதியிலுள்ள பாதரசம் போன்ற சில இரசாயனங்கள், இயற்கைக்கு மாறாக செயல்படலாம். பொஸ்பேட் சுரங்கங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் மாசு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சுரங்க செயலாக்கங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பெரிய அளவிலான தண்ணீரில் கலந்த இரசாயனங்கள் நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீரை மாசுபடுத்தும் சாத்தியத்தை சுரங்க தொழில் பல்வேறு வழிகளில் நீர் பல்லுயிர்களை தாக்க முடியும். வடிகால் நீர் pH ஐ மாற்றலாம், மற்றும் பிஹெச் மாற்றங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் உயிரினங்கள் மீது நேரடி தாக்கத்தை வேறுபடுத்துவது கடினம். நீரோடை உயிரினங்களினூடாக நீரோட்டத்தில் உள்ள உயிரினங்களைப் பாதிக்கலாம், இதனால் பாசி உயிரினங்களைக் குறைக்கிறது. அமில மழை பருவகாலத்தில் தோன்றலாம். இப்படி பல வித தாக்குதலால் கிராமத்தின் சூழல் வெகுவாக பாதிபடைகிறது”. ராஜசேனா சொன்னான்.
“நிலப்பகுதி உயிரினங்கள், தாவரச் செடிகள் பாதிப்படையுமா”? : இன்னொரு ஊடகவியலாளர் கேட்டார்

“சுரங்கத்தில் இருந்து வெளிவரும் நச்சுத்தன்மை உள்ள நீர் தாவரங்கள் உயிரினங்கள், ஆமகியவற்றை பாதிக்கலாம். சுரங்கங்களுக்கு அருகில் வயல்களில் பயிரிடப்பட்ட பயிர்கள்
வெகுவாக பாதிக்கப்படும். விளைச்சல் குறையும்”

“இவ்வளவு பாதிப்புகளால் உங்கள் கிராமம் காலப் போக்கில் அழிந்து போய்விடும் போல் தெரிககிறது. . ஊர்வாசிகள் நோய் வாய் படுவார்கள். அவர்களின் ஆயுள் காலம் குறையும் அப்படித்தானே ? இன்னொரு ஊடகவியலாளரின் கேள்வி இது

“நிட்சயமாக. வரலாறு உள்ள கிராமம் படிபடியாக அழிந்து விடும். வாய்க்கால் நீர் மாசு படுத்தப்படும். காடுகள், விலங்குகள் அழிந்து விடும். அதனால் மழை பெய்வது குறைந்து விடும்:

“ அப்போ உங்கள் ஊர் வாசிகளை வேறு கிராமத்துக்கு புலம் பெயர வைத்தால் என்ன “?

“ இது முடியாத காரியம். இவ்வூர் வாசிகள் தமது வரலாறு படைத் பூர்வீக கிராமத்தை விட்டு வேறு இடத்துக்குப் போக உடன்பட மாட்டார்கள்” ராஜசேனா கண்டிப்புடன் சொன்னான்.
:
உங்கள் எப்பாவல கிராமப் பாதுகாப்பு குழுவின் விளக்கத்துக்கு நன்றி. உங்கள் கிராமத்தின் பாதிப்பை எங்கள் ஊடகங்கள் மூலமாக இந்த நாட்டுக்கு எடுத்து சொல்வோம். அதனால் உங்களுக்கு ஒரு தீர்வு வரும் என்று வந்திருந்த ஊடகவியலாளர்கள் சொன்னார்கள் .

****
மாதங்கள் சென்றது போராட்டம் தொடர்ந்தது .மாரி வந்தது மழை இடைவிடாது பொழியத் தொடங்கியது. எங்கும் ஒரே வெள்ளம் கலாவேவ குளம நிரம்பி யோதஎலாவில் நீர் கட்டுபடுத்தமுடியாமல் ஓடியது. பொஸ்பேட் சுரங்கத்துள் வெள்ளம் பகுந்து அகருவிகளை பாதித்தது. பொஸ்பேட் கொம்பனிக்கு பெரும் இழப்பு மூடவேண்டிய நிலை வந்தது எப்பாவெல ஊர் மக்களின் பிரச்சனையை இயற்கை அன்னை. தீர்த்து வைத்தாள். கல்வெட்டில் எழுதியது உண்மையாகி விட்டது கிராமத்தின் வாழ்வு மலர்ந்தது
(உண்மையும் கற்பனையும் கலந்தது)

****
.

எழுதியவர் : ( பொன் குலேன்திரன் – கனடா) (14-Nov-17, 8:02 am)
பார்வை : 312
மேலே