அன்பு யாருக்கு உரிமையானது

அன்பென்ற ஒன்று,
அது மனிதக்குலத்திற்கே சொந்தமென்று,
மனிதர் குல மாணிக்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க,
இல்லை, அன்பு அனைத்துயிர்க்கும் பொதுவென்று வாதாட முன்வந்தார் அறிவுச்சிகரம் குள்ளநரி...

வழக்கு ஆரம்பமானது...

வேட்டையாடி உண்ணும் மிருகங்களுக்கு அன்பில்லை...

அப்படியானால் மனிதனே சிறந்த வேட்டையாளி, அவனுக்கே அன்பில்லை...

நீதிமன்றத்தில் ஒரே கைதட்டல்கள்...

ஆடை அணியாத ஒழுக்கமில்லா விலங்குகளுக்கு அன்பில்லை...

அப்படியானால் அரைகுறையாக ஆடை அணிபவர்கள் அன்பு குறைவு என்றும்,
அம்மனமாக திரிவோர்க்கு அன்பும் இல்லையென்றும் வைத்துக் கொள்வோம்.
எப்போது பார்த்தாலும் நிர்வாணத்தை இரசிக்கும் மனிதர்கள் மட்டும் அன்பானவர்களா? என்ன பதில் சொல்லுங்க...

மீண்டும் பலத்த கைதட்டல்கள்...

மனிதர்கள் சமூகமாக கூடி வாழ்கிறோம். ஆனால் விலங்குகள் அப்படி இல்லை. ஆகவே அவற்றிற்கு அன்பில்லை...

கூடி வாழ்ந்தாலும் நீங்கள் ஒரு குடும்பமாகவில்லை..
பிளவுபட்டு இருந்தாலும் நாங்கள் ஒரு குடும்பம்...
உணவுக்காக நாங்க வேட்டையாடினால், ஆடம்பரத் தேவைக்காக நீங்க வேட்டையாடுகிறீர்கள்..
ஆகவே மனிதர்களே அன்பற்றவர்கள்...

தீர்ப்பு:- அன்பு அனைத்துயிருக்கும் பொதுவானது..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Nov-17, 6:45 am)
பார்வை : 364

மேலே