இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
நான் பேசி கடந்து வந்த மழலை மொழி தான் அன்று
ஆயினும் இவள் மொழி புரியவே இல்லை எனோ இன்று
உன் போல் தான் உன்னை போலத்தான் செவ்விதழின் நிறம்
பெற்றது என் கரம் சிரம் அன்று எங்கே சென்றது அந்த நிறம் இன்று
தாவி தாவி துள்ளி துள்ளி நான் ஓடினாலும்
உன் போல் தத்தி தத்தி நடக்கும் அந்த பருவத்திற்காய் ஏங்கி சாகிறேன்
எனோ இப்படியெல்லாம் எதிர் பார்த்தும் நானும் உணர்கிறேன்
மழலையாய் உன்னோடு விளையாடும் பொழுது
உன் பிஞ்சு விரல் என்னை அடிக்கும் போது
நெஞ்சம் அது தடையே தெரிவிக்கவில்லை எனோ
மோதும் விரல்கள் போதை ஆக்கிவிட்டது நெஞ்சம்
அது உண்டு இன்னும் பருகி கொண்டே இருக்க தூண்டுதடி
உதைக்கும் கால்களெல்லாம் தென்றலென என்னை தீண்டியபடி
மீண்டும் மீண்டும் உன் உதைகளை இதயம் சுவாசிக்க இன்னும் வேண்டுதடி
மழலை பூ ஓன்று மல்லிகை பூவென புன்னகை பூவை பூக்க
முதல் முறை ஒரு ஆடவன் நானும் கிள்ளி எடுத்து சூடி கொள்கிறேன்
நீ பிறந்து பூமியையையும் மென்மையாகி விட்டாய்
உன் பதம் தொட்டு என் வீட்டிலையும்
கண்ணனென ஒரு கோகுலாஷ்டமி நடத்திவிட்டாய்
ஒரே முறை பத்து மதம் கழித்து பூக்கும் குழந்தை பூவும் நீதான்
பூமியில் பிறந்து நூறு ஆண்டுகளுக்கு மேலும் வாடாது அதிசிய பூவும் நீதான்