அனாதை

இரு மணம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய் !

எட்டு வயதில் தவறுகிறாள் தாய்
சிறுவனின் பன்னிரண்டு வயதில்
வேறொரு மணம் முடிக்கிறான் தகப்பன்,

சித்தி கொடுமை இல்லா வளரும் சிற்றரசன்
ஆனால் ,
சிறுவனின் தாயின் தாயிடமும் அவளின்
தங்கையிடமும் வளரும் ஓர் புலிகேசி மன்னன்,

வயதான வர்களின் வளர்ப்பு வளர்ச்சியுன்
முதிர்ச்சி ,இளமையின் அயர்ச்சி ,

அன்னையிடம் அன்பையும் தந்தையிடம் அறிவையும்
பெறாத வனின் மனம்
தனிமைச் சிறையின் சினம் ....

எழுதியவர் : சங்கர்நாராயணன் (16-Nov-17, 1:39 pm)
சேர்த்தது : shakespeare
Tanglish : anaadhai
பார்வை : 240

மேலே