கரு

கரைந்து கொண்டிருக்கும் கார்மேகம்
கசிந்து கொண்டிருக்கும் கருமேகம்
திசை மறந்த பயணம்
திகைக்க வைக்கும் தருணம்
நிஜம் வெறுத்து நான் நிற்க
நிழல் என நீ வேர் தொடுக்க

ஈர்ப்பு விசை தளர்ந்து
ஈச்சமரம் நானாக
தொப்புளுக்குள் இணைந்திட்டதோ
உனக்கும் எனக்கும் ஆன காந்தவிசை

காணாத கானகத்தில்
கறுப்பு புள்ளியா நான்
கசிந்தொழுகும் என் குருதிக்குள்
காந்தாரமா நீ

தொடரும் விருட்சங்கள்
தொடர்பிழக்கும் போது
துழைக்கப்பட்டேன் துப்பாக்கியின்
துணையில்லாமல்

காவியம் அல்ல நான் - என்
கருவறை கல்லறை ஆனதற்கு
காரணம் அல்ல நான்

அடிவயிற்றின் கனம் மட்டுமே
வாழ்வின் கலை என்றால்
என் அன்பின் விலை என்ன

ஆதாரம் நீ மட்டுமே இந்த
பிணைக்கைதியின் அன்பில்
பிழையில்லை என்பதற்கு

கனவுகள் மடிந்து - என்
கடிகை விரைந்தாலும்
புது இமை கொண்டேன்
உன்னுள் உலகளக்க

கசையிழையாய் உன் நகர்வினில்
நினைவுகள் செழிக்க காத்திருக்கும்
தொலைநோக்கியாய் நான்

அகிலம் கிழித்தும் - அட்டவணைகிட்டாத
உன் அன்பு மொழிகளுக்கு
அகராதியாய் நான்

உன் உமிழ்நீரால் எனக்கான
உலகத்தை உபசரிக்க நினைத்திருக்கும்
வறண்ட நிலமாய் நான்

உன் முத்தச் சாரலில் நான்
துளிர்த்திருக்கும் தருணம்
உணர்ச்சிகளால் உதடுகள்
வரையும் வர்ணம்
அந்த நொடிக்குள்
உறைந்திட துடித்திருக்கும்
என் எண்ணம்...

கனவுகளக்குள்ளும்,
காரணங்களுக்குள்ளும்,
கலந்திருக்கும் இது
கருவிற்காய் ஏங்கும்
என் வாழ்வின் ....கரு....

எழுதியவர் : (16-Nov-17, 5:55 pm)
சேர்த்தது : சௌமிய பாரதி
Tanglish : karu
பார்வை : 95

மேலே