உன்னால் இழந்தவை
நட்பு வட்டம் குறுகி போனது
உறவுகள் எல்லாம், சிதறி போனது
பணிகள் மட்டும் என் நாளானது
பயணம் தானாய் மறைந்து போனது
தாய்மடி தூக்கம் மனம் தேடுது
தாலாட்டு பாட்டு கேக்க தோணுது
உண்ணும் வேளை மாறி போனது
உன்னால் உலகம் உருவானது
தனி உலகம் என்றே எண்ண தோணுது
புன்னகை கூட நேரம் பார்த்தது
புதிரா என் வாழ்க்கையானது
தனிமை நிரந்தரமென சொந்தமானது
அதற்கு காதல் என்று பெயர் வைத்தது