பூவை பூலோகி
நிலவின் ஒளிமுகம் கையில் எடுத்து
நாடு ஆற்றின் நீர் கண்டு - தெளித்து
பிறந்தவன் !
தென்றல் காற்று
தென் மலை வீசி
மறுபிறவி கண்டு திரும்பியது
உந்தன் விரல் பட !
தேன் சிந்தும் நெல்லிக்கனி
கவி பாடும் கானக்குயில்
பனித்துளி கண்ட புல்வெளி
தவம் கண்டு
நிற்கிறது
உந்தன் பார்வைக் காண !
பூமி மீது மிதக்கும்
மேகக் கோலங்களும்
பூவை மீது படும்
தாவணியும்
வரம் கொண்டவை
பொறாமை உருவாக்க கூடியவை
எனக்கும் பூமிக்கும் !
நீர் விட்ட வழிக்கு
நீ கண்ட கவிதைக்கும்
வழி கண்ட ஆற்றுக்கும்
பொருள் கண்ட சொல்லும்
உன்னைக் காணவில்லை போல
- கண்டால்
அடங்கிவிடும் - அழகில்!
அர்த்தம் தேடி
அலைந்த பலருக்கும் அகராதிக்கும்
மதி கேட்டான் சோலையில்
மரம் தான் நட வேண்டும்
விவரம் தெரியாமல் அலைந்ததற்கு !
கவிஞன் தேடியது வரிகளை
வரிகள் தேடியது வலிமிகுந்த சொற்களை
சொற்கள் தேடியது அழகின் வார்த்தைகளை
ஒரே பதில்
வானத்து தேவதைகளும் கூட
உன்னை !