அவள் வருவாளா

கோடி பொன் கொடுத்தால் போதுமா ?
என்னைக் கண்டதும் மூடித் திறந்த அந்த
அழகு இமையையும் வண்டூரும் விழிகளையும்
படைத்த அந்த இறைவனுக்கு
அவள் கன்னத்தில் ஏன் இந்த சிறு மச்சம்
உருளியாய் அவன் வைத்தான்?
ஓஹோ.. நிலவின் கண்பட்டு அவளுக்கு ஏதாவது ஆகிவிடும்
எனப் பயந்து தானோ இந்தத்தூர திருஷ்டிப் பாதுகாப்பு

சந்தணப் பேழையில் உருக்கி தாளை மலர் நிறம் கூட்டி
வடித்த வண்ண ரதம் போன்று அவள் அங்கே நின்றாள்
தன் இடையில் படர விட்ட அடம்பன் கொடி வஞ்சம் பொறுக்காமல்
ஒடிந்து விடுமோ எனப் பயந்து தன் தடங்களை
சிறிதாக்கி மெதுவாக அங்கே நின்று அசைந்து சென்றாள்
என் இன்னுயிரையும் அவள் அக்கணமே எடுத்துச் சென்றாள்

காலையிலும் வெயில் சுடும் வேளையிலும்
காரிருள் படியும் அந்தி மாலையிலும்
நீளும் இரவினிலும் அரவம் இல்லாமல் வந்து
என் நெஞ்சைப் பிழிகின்றாள்
அனலில் இட்ட புழுவாய் வெந்து
துடிக்கின்றேன் நான் அவள் நினைவால்
அவள் மீண்டும் இங்கே வருவாளா என்னில் குளிர் மழை பெய்வாளா

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (18-Nov-17, 2:26 pm)
பார்வை : 604

மேலே