கவியரங்கம் -- நூறு

பாசத்தில் விஞ்சி நிற்பவர் - மகனே!!!
~~~~~~~~~~~~~
அன்பு என்பதன் அர்த்தம் மகனே;
அன்பனாய் நின்று அனைத்தும் பகிர்வான்;
அன்றாடம் நிகழ்வன
அலுக்காது உரைப்பான்:
அண்மையிலே இருந்து அரவணைத்து மகிழ்வான்.

ஆக்கம் தந்து ஆதரவு அளிப்பான்;
ஆக்கினை அறிந்து அனைத்தும் செய்வான்;
ஆதிக்கம் செலுத்தி ஆக்கிரமித்து நிற்பான்;
ஆண்டவன் அளித்த ஆணிவேர் அவனே.

இயல்பு மாறாது இலக்குடன் நடப்பான்;
இங்கிதமாய் நடந்து இன்பங்கள் நல்குவான்;
இனிமையான வாழ்வில் இடறினை நீக்குவான்;
இடுகாடு போகுமட்டும் இணைந்தே இருப்பான்.

ஈரைந்து மாதங்கள் ஈன்றெடுத்த துயர்தனை
ஈருயிராய் இருந்து ஈடுதான் செய்திடுவான்;
ஈரேழு உலகத்திலும் ஈடிணை அற்றவனாய்
ஈடுபாடு குறையாது ஈன்றவளைக் காத்திடுவான்.

பாசத்தில் மகனையன்றி பாராட்ட எவருண்டு?
பாதகம் செய்யாது பாக்கியம் புரிந்திட்ட
பார்மகள் போன்றவளுக்கே பாதுகாப்பாய் புதல்வர்கள்
பார்புகழும் வண்ணம் பாதபூஜை செய்திடுவர்!!

தாய், மகள், தந்தை, உடன்பிறப்பின்
தாளாத பாசமது திருமணம் வரையிலே;
மகனது பாசமோ மருமகள் வந்தாலும்
மட்டில்லாது தொடரும் மாமழையைப் போன்றதே!!!

நி.மு.எண்.1345,
க. லட்சுமி ராம்பிரசாத்,
திருச்சிராப்பள்ளி.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Nov-17, 9:47 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 95

மேலே