இறைவன்
கம்பிவழியே பாயும் மின்சாரம்!
காண முடியாது, ஆனால் ,
அது தரும் ஒளியை நாம்
காண முடிகிறதே -இத்தனை
ஏன், மின் கம்பியை தொட்டுவிட்டால்,
ஐயோ என்று அலறிட அதை
தீண்டும் அனுபவம் பலருக்கு உண்டு!
இறைவனும் அப்படித்தான் - காண முடியா
பரம்பொருள், உணர முடியும் அவன்
பொழியும் அன்பை வைத்து ,,ஆனால்
தொடமுடியா சக்தி அவன், காணவும்
முடியும் அவனை, குழந்தையின் சிரிப்பில் ,
மேகம் தரும் மழையில், மின்னல் ஒளியில்
ஆர்க்கும் கடல் அலையில்,பாயும் நதியில்
பாடும் குயில் ஓசையில்,காக்கைச் சிறகில்
வெடிக்கும் எரிமலை காக்கும் தீயில்
பனிமலையில் ...................இன்னும் , இன்னும்
கணக்கிலடங்கா அவன் படைப்புகள் எல்லாம்
இன்னும், இதற்குமேல், இறைவனை
காணவில்லையே என்றால்
கண்ணிருந்தும் குருடர்கள் அல்லவா நாம்!