மனத்தொகுப்பாளன்- 1 ஒரு எடிட்டரின் காதல்

மனத்தொகுப்பாளன் (ஒரு எடிட்டரின் காதல்) பாகம் -1
’டிங்’ என ஒரு மணி சத்தம் . நெக்ஸ்ட் என ஒரு ஒரு குரல் சத்தம் கேட்டதும் எழுந்து ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான் .
எதிரே இருக்கையில் அமர்ந்திருந்தவர் டேக் யுவர் சீட் என சொன்னதும் இருக்கையில் அமர்ந்தான்
உங்க பேரு என்ன?
ஜனா,,
எங்க இருந்து வரிங்க
என்னோட சொந்த ஊர் பாண்டிச்சேரி
இப்போ தங்கி இருக்கிறது கிண்டி கத்திப்பாரா பக்கதுல
சரி உங்களுக்கு எதுல இண்ட்ரஸ்ட்
எனக்கு எடிட்டிங் ரொம்ப இண்ட்ரஸ்ட்
ஒ அப்படியா ! என்ன சாப்ட்வேர்ஸ் தெரியும்
FCP , PREMIRE PRO, AVID
நீங்க பண்ன ப்ராஜெக்ட்ஸ் வச்சி இருக்கிங்களா , இருக்கு சர் . என சொல்லி அவனது ஆண்ட்ராய்டு மொபைலில் நண்பர்களுடன் பண்ன குறும்படங்களை காட்டிவிட்டு ஒரு சில மாஸப் வீடியோக்களை காட்டினான் ஜனா
ரொம்ப நல்லா பண்ணி இருக்கிங்க
தேங்க்யு சர்
சாலரி எவுலோ எதிர்பாக்குரிங்க
25k சர்
சரி இப்போ 21k கொடுக்குறோம்
தென் உங்க பர்ஃபாமென்ஸ் பாத்துட்டு இன்கிரிமெண்ட் பண்ணுறோம்
சரி நீங்க மண்டே ல இருந்து ஜாப் வந்துடுங்க உங்க டீடைல்ஸ் லாம் வெளிய PA கிட்ட கொடுத்துடுங்க
ஒகே சார்
மனதில் முழுசந்தோசத்துடன் வெளியே வந்தான். வெளியே வந்து தன் நண்பனுக்கு போன் அடித்தான் வேலைக்கு சிபாரிசு செய்தவன் ஆனால் போகவில்லை தனது தம்பிக்கு போன் செய்தான் போகவில்லை சரி அப்புறம் சொல்லலாம் என நினைத்து
அலுவலக கேண்டின் உள்ளே நுழைந்தான்
அண்ணா ஒரு டீ
ஆவி பறக்க டீ போட்டு கொடுத்தார் கேண்டினில் வேலை செய்பவர்
எவ்வுளவு டீ னு கேட்டு 50 ரூபாய் எடுத்து நீட்டினான்
தம்பி ஆபிஸ்க்கு புதுசா
ஆமான்னா எப்படி கண்டு பிடிச்சிங்க ? அதான் டீக்கு காசு நீட்டுரீங்களே தம்பி இங்க ஆபிஸ் கேண்டின் ல டீ ,காப்பிக்குலாம் காசு கிடையாது
ஓ அப்படியா எனக்கு தெரியாது அண்ணா .
தம்பி என்ன வேலையா வந்து இருக்கிங்க ?
இங்க புதுசா வேலையில ஜாயின் பண்ணி இருக்கேன் அண்ணா
நல்லது என்ன டிப்பார்ட்மெண்ட் ல தம்பி சேர்ந்ந்து இருக்கிங்க
எடிட்டர் அண்ணா
அருமை வாழ்த்துக்கள் தம்பி . நல்லா பண்ணுங்க
ரொம்ப தேங்க்ஸ்னா
என சொல்லி டீயை குடித்துவிட்டு வெளியே வந்தான்
தனக்கென ஒரு வேலை கிடைத்துவிட்டது என்ற எண்ணம் மனம் முழுக்க நிறைந்து இருந்தது
ஏனென்றால் இந்தியாவிலே மிகப்பெரிய சன் தொலைக்காட்சி நிறுவனம்
அதில் தானும் ஒர் அங்கம் என நினைத்து சந்தோசத்துடன் வெளியே வந்தான் .
அவனுக்குள் ஒரு புது நம்பிக்கை பிறந்தது அவனுக்கென்று ஒரு வேலை இனி யாரிடமும் தேவைக்கு உதவி கேட்க தேவை இல்லை என்ற எண்ணம் பிறந்தது.
MRC நகர் சாலையை கடந்து பேருந்து நிறுத்ததிற்க்கு வந்து உட்கார்ந்தான் அன்று அவன் இருந்த சந்தோச மனநிலை போல் இதுவரை இருந்ததில்லை
மாலை 5 மணி ஆனது அங்கிருந்து மெரினா கடற்க்கரைக்கு சென்றான்
அங்கு இருக்கும் இருக்கையில் உட்கார்ந்து அமைதியாக இருந்துவிட்டு தன் நண்பனுக்கு போன் பண்ணினான்
ஹலோ ஜோசப்
சொல்லுடா என்னாச்சு இண்டர்விவ்
செலெக்ட் பன்னிடாங்க மச்சான்
ஹே செம்ம டா வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஆ நீ எங்க டா இருக்க
நான் சேப்பாக்கம் ல இருக்கன் டா
சரி விவேகானந்தர் ஹவுஸ் கிட்ட வா டா
ஒரு அரை மணி நேரத்துல வரன் மச்சி
அரை மணி நேரம் கழித்து ஜோசப் வந்தான் வந்த்தும் ஜனா வை கட்டி பிடித்து
வாழ்த்துக்கள் எடிட்டர் சார்
மச்சி ரொம்ப தேங்ஸ் டா நீ சொல்ல்லனா ஜாப் கெடச்சி இருக்காது
டேய் நான் ஜெஸ்ட் சொல்லி தான் டா விட்டன் பட் நீ நல்லா வொர்க் பன்னி இருந்த்தால தான் உனக்கு ஜாப் கிடைச்சுச்சு
டெய் அதுலாம் ஒன்னுமில்லை டா எல்லாம் உன்னால தான்
இதே பிராஜக்ட் எடுத்துட்டு போய் மத்த சேனல்ஸ் ல காட்டுன பட் அவங்க ரெஸ்பான்ஸ் பண்ணல
இவங்க மட்டும் எப்படி எடுத்தாங்க எல்லாம் உன்னாலதான் டா
டேய் போதும் டா சாமி விடு டா
ப்ரண்ட்ஸ்குல்ல இதுலாம் தேவையா சொல்லு சரி வா எனக்கு பசிக்குது சூடா மிளகா பஜ்ஜி சாப்பிடலாம்
அக்கா மொத்த்ம் 8 பஜ்ஜி சாப்ட்து என ஜோசப் காசு கொடுத்துவிட்டு இருவரும் தங்களது ரூமிற்க்கு சென்றனர்
ஜனாவிற்க்கு எப்போது திங்கள் கிழமை வரும் என ஆசை ஆசையாய் எதிர்பார்த்து கொண்டு இருந்தான்
திங்கள் கிழமை வந்தது . காலையில் எழுந்து ஆசையுடன் வேலைக்கு கிளம்பினான்
அவன் கல்லூரி காலங்களில் இருந்த பிறகு இப்போது தான் இப்படி சந்தோசமாக கிளம்புகிறான்
காரணம் இந்த வேலையில்லா திண்டாட்டம் படுத்திய பாடு அப்படி
முதல் நாள் வேலை உள்ளே சென்றான் 6 வது மாடியில் அவனது பணி
அங்கே இருந்த ரிசப்னிஸ்ட் அருகே சென்று அவனை பற்றி சொன்னான் அவர் சிறிது நேரம் உட்கார சொல்லிவிட்டு தொலைபேசியை எடுத்து பேசிவிட்டு அவனை அழைத்தார்
கேபின் 5 ல விக்னேஷ் இருப்பாங்க அவர போய் பாருங்க
கேபின் 5 எங்க இருக்கு சொல்லுங்க
நேரா போய் ரைட் சைடு ஃபர்ஸ்ட் கேபின்
ஜனா கேபின் 5 போனான்
ஹலோ சார் இங்க விக்னேஷ் ??
யா இட்ஸ் மீ நீங்க
ஐம் ஜனா புதுசா ஜாயின் பண்ண எடிட்டர்
ஓ நீங்க தானா HR சொன்னாங்க வாங்க
எங்க இருந்து வரிங்க கிண்டி ல இருந்து நேட்டிவ் எங்க
பாண்டிச்சேரி வாவ் செம்ம ஊரு போங்க
ஜனா இங்க மொத்தம் 80 எடிட்டிங் ரூம்
இருக்கு வீக்க்லி ஒரு ஷிப்ட் மாறும்
நீங்க புதுசு சோ சன் மியுசிக் போங்க தென்
அப்புறம் மத்த புரோகிராம்ஸ் பாத்துக்கலாம்.
சரியா
ஒகே சர்
விக்னேஷ் ஜனாவை எடிட்டிங் ரூமிற்க்கு அழைத்து சென்று அவனுக்கு புதிய லாக் இன் ஐ டி தயார் செய்து கொடுத்தார்
ஜனா நீங்க எதாச்சும் பாஸ்வேர்டு போட்டுகோங்க
இதுல இருக்குர புரோகிராம்ஸ்லாம் பாருங்க எப்படி எடிட் பண்ணி இருக்காங்கனு உங்களுக்கு ஐடியாஸ் கிடைக்கும்
இங்க இருக்க சிஸ்டம் எல்லாம் எங்கு வேணாலும் உங்க ஐடி போட்டு ஒபன் பண்ணலாம்
சரி ஒகே ஜனா பாருங்க அப்புறம் ப்ரோகிராம் புரோடியுசர்ஸ் வருவாங்க அவங்க சொல்லுர மாதிரி எடிட் பண்ணி கொடுங்க
சரிங்க சார்
ஜனா சிஸ்ட்டதில் உள்ள ப்ரோகிராம் எல்லாம் ஓப்பன் செய்து பார்த்துக்கொண்டு இருக்கிறான்
திடிரென கதவு திறக்கும் சத்தம் கேட்டது ஜனா திரும்பி பார்த்தான் யாரும் கதவை திறக்கவில்லை
மருபடியும் சத்தம் கேட்டது திரும்பி பார்த்தான்
திறக்கவில்லை
கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு ப்ரோகிராமை பார்த்துக்கொண்டு இருந்தான்
சமயம் திடிரென கதவு திறந்தது
கதவு திறந்த்தும் வெள்ளை நிற சுடிதார் அணிந்து ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்
அவனுக்கு இதய துடிப்பு சராசரியை விட சற்று அதிகமாக துடித்தது காரணம்
இவனுக்கும் பெண்களுக்கும் சற்று இடைவெளி அதிகம்
படித்தது எல்லாம் பசங்க கூட மட்டும் பிறகு எப்படி பொண்ணுங்க் கிட்ட பேசரது
ஹாய் சொல்லுரதுக்கே அரை மணி நேரம் ஆகும்
அவளோ அருகில் உள்ள நாற்க்காலியில் அமர்ந்தாள் இன்னும் அதிகமாக படபடப்பு அதிகமானது
எக்ஸ்கியுஸ் மி ஐயம் சஞ்சனா சன் மியுசிக் ல ப்ரோகிராம் ப்ரொடியுசர்
கம்மிங் வீக் விஜய் ஒட பர்த் டே சோ நீங்க அவரோட சாங்ஸ் ல இருந்து ஒரு மாஸப் வீடியோ பண்ணி கொடுங்க
ஓவர் ஆல் எல்லா படங்களும் வர மாதிரி பன்னுரிங்களா பன்னிட்டு எப்போதும் போடுர ஃபோல்டர் ல போட்டு விடுரிங்களா
ஏன்னா நான் இன்னைக்கு தான் ஜாயிண்ட் பன்ன சோ எனக்கு தெரியாது என்னோட சீனியர் சொன்னாங்க எடிட்டர்ஸ் க்கு தெரியும் எதுல போடனும்னு சோ நீங்க பண்ணி அப்லோடு பண்ணிடுங்க
ஜனா திக்கி தடுமாரி சாரி நானும் இன்னைக்கு தான் ஜாயின் பண்ண என சொன்னான்
ஓ அப்படியா சரி நான் வேறு எடிட்டர் கிட்ட சொல்லி பண்ண சொல்லுரன் என சொல்லி எழுந்து கிளம்பிவிட்டாள் கதவை சாத்திவிட்டு
அவள் போனது அவனை அவனே கேவலமா திட்டி கொண்டான்
அறிவு இருக்கா டா உனக்கு இப்படி தான் அவசர பட்டு வாய விடுவியா
ஒலுங்கா அவ சொன்னத பண்ணி இருந்த்தா கொஞ்சமாச்சும் இம்ப்ரெஸ் பண்ணி இருக்கலாம்
இப்படியே இரு அறிவ இல்ல டா உனக்கு இனிமே அவள பாக்குர சான்ஸ் கிடைக்குமா முட்டாள் என திட்டி கொண்டு இருக்கிறான்
வேறு எடிட்டரை பார்க்க சென்ற சஞ்சனா எல்லா எடிட்டரும் பிசியாக இருப்பதால் வைத்து தான் எடிட் பண்ணனும்னு நினைத்துகொண்டு அவனது அறையை நோக்கி நடக்கிறாள்
(தொடரும்)
கருத்து தெரிவித்துவிட்டு செல்லுங்கள்