பணமதிப்பிழப்பு
வருடமொன்று சென்றாலும்
வாழ்க்கையின்னும் மாறல -என
வருத்தப்படும் மக்களே
இன்னும்
ஐந்து வருடம் முடிய
ஐயம் ஏதும் தேவையில்ல
மாற்றம் தேடி அலைஞ்சோம்
மறுபடி காச வாங்கி தோலைஞ்சோம்
மாத்தி ஒட்ட குத்திபுட்டு
மனுசன் அவர திட்டிபுட்டு
முயற்சிக்காமல் முக்காடிட்டு
முந்தியவனை புறம்பேசி
வரிசையில நிக்காம
ரசிதையும் வாங்காம
மற்றம் மட்டும் வந்திடனும் - நாங்க
மாறாம நின்னிடனும்
-கோராத