நனைந்து நின்ற அந்நேரம்

முருங்கை இலையோடு முத்து முத்தாய் தூரல்கள்..
வெள்ளை நிற பூவோடு தொட்டு பேசும் சாரல்கள்..
காற்றின் இசையோடு தலை ஆட்டி அசையும் மர கிலைகள்..
வானம் இருளகண்டு மின் ஒளி ஏற்றும் மின்னல்கள்..

சாலையினில் புது நதிகள்..
மாலையினில் மௌனங்கள்..

தொட்டு பேசும் மாலை சாரல்கள்.,
தட்டி எழும்பும், மனதோடு தூரல்கள்..

நெஞ்சோடு பேசும் நினைவலைகள்.,
கொஞ்சம் சிரிக்கும் என் இதழ்கள்..

மாலை தென்றல், துணையாக மழை கொண்டு வர..
நெஞ்சம் நனைந்து நின்றேன்..
தங்கை இவள் முகம் காண ஏங்கி நின்றேன்..

- சுதா ஜானகி.

எழுதியவர் : சுதா ஜானகி (21-Nov-17, 12:42 am)
சேர்த்தது : Sudha Janaki
பார்வை : 1698

மேலே