திருப்பதி மலைமேவும் நெடுமாலே

நிலா முற்றம் குழுமத்திற்கு நன்றி
மெட்டுக்குப் பாட்டு
போட்டி எண் 2
பாடல் -1
பல்லவி
திருப்பதி மலைமேவும் நெடுமாலே
திரு,ப்பதி நீ தானே திருமாலே காக்கும் திருமாலே (திரு)
திருப்பதி மலைமேவும் நெடுமாலே
திருப்பதி நீ தானே திருமாலே காக்கும் திருமாலே (திரு)
மாலையை தொடுத்துவந்தாள் ஆண்டாளே- தமிழ்
மாலையை தொடுத்துவுன்னை ஆண்டாளே
மாலையை தொடுத்துவந்தேன் மாதவனே- என்
மனத்துயர் போக்கிடுவாய் கேசவனே(திரு)

பாடல் 2
முன்னோனை நாம் தொழுதால் -நலம்
தன்னாலே கூடிவரும்
இன்னுமா தூங்குகிறாய் -உடன்
எழுந்திடு தொழுதிடவா (முன்னோனை)
முன்னோனை நாம் தொழுதால் -நலம்
தன்னாலே கூடிவரும்
இன்னுமா தூங்குகிறாய் -உடன்
எழுந்திடு தொழுதிடவா (முன்னோனை)

அண்ணல்நபி மொழியிருந்தும்
ஆறறிவில் அதுபதிந்தும்
கண்ணுறக்கம் விடவில்லையோ
கடவுளின் நினைப்பில்லையோ
அண்ணல்நபி மொழியிருந்தும்
ஆறறிவில் அதுபதிந்தும்
கண்ணுறக்கம் விடவில்லையே
கடவுளின் நினைப்பில்லையோ(முன்னோனை)

பாடல் -3

துதித்தேனே மேரிமாதா -என்றும்
கதி நீயே மேரிமாதா
துதித்தேனே மேரிமாதா -என்றும்
கதி நீயே மேரிமாதா

மண்மீதில் தேவ மகனை
மகனாக ஈன்ற தாயே
பண்பாடி உன்னைப் போற்றி
பணிந்தேனே கன்னித் தாயே (துதித்தேனே)

எழுதியவர் : சு.ஐயப்பன் (22-Nov-17, 5:43 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 380

மேலே