பொன்மணி
மண் தின்னும் வயதில்
மனதில் ஓர் உருவம்
மந்தஹாசம் செய்ய கண்டேன்
பட்டிழையில் பாசி மணிகள் கோர்த்து
கட்டழகை கண் காணும் காட்சியாய்
பெட்டகத்தில் வடித்து வைத்தேன்
காளையனாய் கடல் கடந்து வந்து
வேலையகத்தில் வேல் விழியாளை பார்த்ததில்
சோலையென சொப்பன முகம் புரிந்தது
கோர்த்து வைத்த மணிகள் யாவும்
வீண்மணி அன்று என அறிந்தேன்
பொன்மணி என்று தெளிந்தேன்