மார்க்கண்டேயர் வரலாறு

மார்க்கண்டேயர் வரலாறு
****************************

மார்க்கண்டேயரின் மூதாதையர்
"""""""""""""""""""""""""""""""""""""""""
இந்தியாவில் உள்ள தொண்டி நாட்டில் கடகம் எனும் ஊரில் வாழ்ந்தவர் தான் குச்சகர் எனும் அந்தணர்.
அவருடைய குமார்ர் கெளச்சகர் என்பவர் ஆவார்.இவர் அருகில் இருந்த வனத்தில் சிவபெருமானை நினைத்து
கடும் தவம் புரிந்து வந்தார்.
மிருகங்கள் தங்களது உணர்வைத் தீர்த்துக்கொள்ள உராய்நதாலும் அதை உணராத நிலையில் கடும் தவம் புரிந்தார்.அதனால் கெளச்சகர் "மிருகண்டூயர் " என்ற பெயரைப் பெற்றார் .
இந்த முனிவர் அவரது தாய் தந்தையரின் விருப்பப்படியே சோழ நாட்டில் உள்ள அநாமயம் எனும் வனத்தில் வாழ்ந்த உசத்திய முனிவரின் மகளான விருத்தயை மணந்து இனிதே இல்லறம்்நடாத்தி வந்தார்.இவர்களுக்கு "மிருகண்டு"
என்பவர் புதல்வராகப் பிறந்தார்.

( தொடரும்........)

எழுதியவர் : காவ்யாஞ்சலி (24-Nov-17, 8:41 pm)
சேர்த்தது : தேவாதேவா
பார்வை : 145

மேலே