மறதி

மறதி
----------------
மருந்தும் கல்வியும் இலவசம் என்பது
மறந்துபோனது நமக்கு - கொடிய
பருந்தும் ஆந்தையும் ஆளும் நாட்டில்
பகலும் இரவும் எதுக்கு
அருந்தும் மதுவும் வருந்தும் சிறையும்
அவமானம் என்பது போச்சு - தன்னை
மறந்தான் திருந்தா மனிதன் இறந்தான்
மதுவே அரசின் மூச்சு
இறந்தா போனாய் எழுவாய் மனிதா
பிறந்தாய் தமிழின் பிழையாய் - மொழி
மறந்தால் துறந்தால் மலமாய் புழுவாய்
மறைவாய் யொருநாள் முழுதாய்
- கரு அன்புச்செழியன்