அதில் அர்த்தம் உள்ளது
நாக்கை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது?
நீங்கள் பேசி வார்த்தைகளை மென்று ஜீரணிக்க பற்கள் வேண்டாமா?
மாடு கேட்டது..
அதில் அர்த்தம் உள்ளது...
வாலில்லாமல் சேட்டை செய்யும் இரண்டு கால்கள் கொண்ட விலங்குகளே!
உங்கள் செயலில் இயற்கையிடம் கொஞ்சமாவது நன்றி இருக்க வேண்டாமா?
நாய் கேட்டது...
அதில் அர்த்தம் உள்ளது...
ஆணென்றும், பெண்ணென்றும் படைத்தான் அனைத்து உயிர்களிலும் வாழ்வில் நிலைபெற..
ஆண் மகனே பெரியதென்று சிலர் கூத்தாட,
பெண் மகளே பெரியதென்று சிலர் வாதாட,
ஒருவரை ஒருவர் மதியாமை கண்டு ஆணையும், பெண்ணையும் ஒன்று சேர படைத்தான் திருநங்கையென்று...
உண்மை உணர்ந்து திருந்தாத மனிதர்களே!
ஆணாதிக்கம் தனித்தும்,
பெண்ணியம் தனித்தும் தனியுலகில் படைத்தால் என்ன செய்வீர்கள்?
பாதிக்கப்பட்டவன் கேட்டது...
அதில் அர்த்தம் உள்ளது...
பெண்ணை அடக்கவே ஆணென்றால், ஆண்களைப் படைத்ததே வீண்தானே...
வாழ்வின் பக்கத்தை படித்து உணர்ந்தால் இக்கவிதையின் அர்த்தமும் உங்களுக்கு புரியுமே...
புரியாமல் இருப்பவர், பயனற்ற வீணர்...
ஆண்,பெண் ஒற்றுமையில் உள்ளது வாழ்க்கை...
மனைவியின் வளர்ச்சி கண்டு கணவன் பொறாமை கொண்டால்,
குடும்பம் என்பது யுத்தகளமே...